இனி திருவண்ணாமலைதான் – நித்தி முடிவு!!
பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா தியான பீடம் அமைந்துள்ளது. அங்கு நித்யானந்தா தங்கி இருந்து ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் சீடராக இருந்த ஆர்த்திராவ் என்ற பெண் பெங்களூர் பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா மீது பாலியல் புகார் கூறினார். இந்த வழக்கு சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் நித்யானந்தா சாமியாருக்கு பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் நேற்று ஆண்மை பரிசோதனை 5½ மணி நேரம் செய்யப்பட்டது.
நித்யானந்தாவுக்கு நடத்த ஆண்மை பரிசோதனை பற்றிய செய்தி கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் நாள் முழுவதும் மிக முக்கிய இடம்பெற்றது.
இந்த பரிசோதனை முடிந்து நித்யானந்தா தனது தியான பீடத்திற்கு திரும்பியபோது அவரை பின்தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்களை சேர்ந்தவர்கள் செய்தி சேகரிக்க சென்றனர். தியான பீடத்தின் முன் பகுதியில் தொலைக்காட்சி ஊடக பிரதிநிதிகள் மீது நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கியதாக கூறி அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
சில கன்னட அமைப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸ் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
நித்யானந்தா சாமியார் வழக்கமாக இணையதள தொலைக்காட்சியில் தினமும் சொற்பொழிவு ஆற்றுகிறார். அதேபோல் அவர் இன்று இணையதள தொலைக்காட்சியில் தனது பக்தர்களுக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். சொற்பொழிவை தொடங்கும் முன் ஒரு அறிவிப்பை வெளியிடுவதாக அவர் கூறினார்.
அந்த அறிவிப்பை வெளியிட்டு அவர் தொடர்ந்து பேசுகையில், “பிடுதி தியான பீடத்தை திருவண்ணா மலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன். ஒட்டுமொத்தமாக அனைத்தும் இங்கிருந்து மாற்றப்படுகிறது. தினமும் நடைபெறும் பூஜைகள் உள்பட அனைத்தும் திருவண்ணாமலையிலேயே நடைபெறும். இந்த பிடுதி தியான பீடம் தொடர்ந்து செயல்படும். இனிமேல் நான் வழக்கு சம்பந்தமான விஷயங்களுக்காக மட்டுமே பெங்களூர் வருவேன்“ என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating