சித்தார்த்துக்கு பைத்தியமாம் – சமந்தா பேச்சு!!
கமல் நடித்து வெளிவந்துள்ள படத்தின் தலைப்பில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் எனக்குள் ஒருவன். இப்படத்தில் தீபா சன்னிதி நாயகியாக நடிக்கிறார். பிரசாத் ராமர் இயக்குகிறார். லூசியா என்ற பெயரில் கன்னடத்தில் ஆயிரம் பேர் நிதியுதவியுடன் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தமிழில் சிவி குமார் தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகை குஷ்பு, சமந்தா, நடிகர்கள் விஜய் சேதுபதி, நரேன், ஜான் விஜய், அருண்பாண்டியன் இயக்குனர்கள் சீனு ராமசாமி, பவன்குமார், வசந்த பாலன், நலன் குமாரசாமி தயாரிப்பாளர்கள் சிவா, மதன், ஞானவேல் ராஜா, வெண்கோவிந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இசை வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் சிவா பேசியதாவது:” கமல் நடிப்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் எனக்குள் ஒருவன். இந்தப்படத்தின் தலைப்பை சித்தார்த் நடித்துள்ள இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. சித்தார்த் நடிக்கும் இந்த படத்திற்கு கமல் படத்தின் தலைப்பை வைத்தது பொறுத்தமானதுதான். ஏனெனில் சித்தார்த் ஒரு ஜூனியர் கமல்” என்றார்.
இந்த படத்தின் கதை ஏற்கனவே எனக்குத் தெரியும். இந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் எப்படி நடிப்பார் என்று யோசித்தேன். ஆனால், படம் பார்த்த பின் அதனை சித்தார்த் உடைத்தெறிந்துள்ளார் என்று இயக்குனர் வசந்தபாலன் பேசினார்.
சித்தார்த் பேசும்போது, “எனக்கு மிகவும் பிடித்த குஷ்பு மற்றும் சமந்தா ஆகியோர் விழாவிற்கு வந்துள்ளனர். மிகவும் சந்தோஷம். கன்னடத்தில் வெற்றி பெற்ற லூசியா படத்தை தமிழில் எப்படியாவது தயாரிக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால். அதற்கு முன் சிவி குமார் இந்த வாய்ப்பை பெற்றுவிட்டார். என்றாலும், இந்த படத்தில் நடிப்பது சந்தோசம். இந்த நடிகர் என்றால் இப்படித்தான் நடிப்பார் என்று எண்ணம் உண்டு. இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்று 18 மாதங்களாக முயற்சி செய்து இதில் நடித்துள்ளேன்” என்றார்.
சமந்தா பேசும்போது, சித்தார்த் ஒரு சினிமா பைத்தியம். அவர் எப்போதும் சினிமாவைப் பற்றியே யோசிப்பார். மேலும் இந்த படத்தின் பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளருக்கு என்னுடயை வாழ்த்துக்கள் என்று கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating