மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட சுவிஸ் பிரஜை சுட்டுக்கொலை

Read Time:1 Minute, 37 Second

Swiss.Map.jpgமட்டக்களப்பை கோட்டைக்கல்லாறை பிறப்பிடமாகக் கொண்ட வடிவேல் புவனேந்திரன்(35) இன்று (25-06-2006) மாலை 3.10 மணியளவில் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வன்னிப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 15 வருடங்கள் இவர் சுவிஸ் நாட்டில் வாழ்ந்தவர் எனவும் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் விடுமுறையில் குடும்பத்தினருடன் தமது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கு வந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை யாழ் ஆஸ்பத்திரி வீதியில் போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தனது வேலை ஸ்தலத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் சைமன் என அழைக்கப்படும் முகமது பசீர் (48) என்ற குடும்பஸ்தரே புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். புளொட் அமைப்பின் அங்கத்தவரான இவர்; யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ள யாழ் மாநகர சபை தேர்தலில் வேட்பாளராகவும் அவர்; இடம் பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 3 முறை சாம்பியனான இத்தாலி கால் இறுதிக்கு தகுதி பெறுமா?- ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்
Next post புலிகளின் விமானத்தளத்தின் பிரதான பகுதிகள் விமானத் தாக்குதலினால் அழிப்பு