குழந்தைகளின் பாலியல் தேர்வு குறித்து வலைத்தளம் நடத்தியவர் குர்கானில் கைது!!

Read Time:2 Minute, 24 Second

209a2d2d-404e-4563-927c-6e4ab2ef26bc_S_secvpfகுழந்தையில்லா தம்பதியர் ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு உதவும் பாலியல் தேர்வுக் கருவிகளைத் தனது இணையதளத்தின்மூலம் விற்பனை செய்துவந்த உரிமையாளர் ஒருவர் குர்கானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள பிரிஸ்டல் லாரென்ஸ் சாலையில் சஞ்சய் கடானா என்பவர் ஒரு இணையதள அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார். இந்தியில் எம்.ஏ. வரை படித்துள்ள இவர் பஞ்சாப் மற்றும் அரியானா பகுதிகளில் ஆண் குழந்தை பெற ஏங்கும் தம்பதிகளைத் தனது விளம்பரம் மூலம் கவர்ந்து 6000 ரூபாய்க்கு தனது பாலியல் தேர்வுக் கருவிகளை விற்பனை செய்துவந்துள்ளார்.

இந்த விற்பனைக் கருவித் தொகுப்பில் ஆண்குழந்தை பெறுவதற்கான வழிமுறைகள் கொண்ட கையேடு ஒன்றும், அதற்கான உணவு முறைகளும் இணைக்கப்பட்டிருக்கும்.

செய்தி அறிந்து சுகாதாரத்துறை, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒரு கூட்டுக்குழு நடத்திய ரகசிய நடவடிக்கையில், நேற்று குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதார செயலாளர் ராகேஷ் குப்தா தெரிவித்துள்ளார். அத்துடன் அவரிடம் இருந்த இதுபோன்ற விற்பனைக் கருவிகள் இரண்டு செட்டும் பறிமுதல் செய்யபபட்டுள்ளன.

இதுபோல் 70 செட்டுகளை கடானா விற்றுள்ளதாகவும், ஒருவருமே இதுவரை எந்தவிதமான புகாரையும் அளிக்கவில்லை என்றும் தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவரான சரயு ஷர்மா கூறினார். தன்னுடைய வாடிக்கையாளர் ஒருவரும் இவரை அணுகியதில் இந்த முறையைப் பின்பற்றினால் நூறு சதவிகிதம் வெற்றி கிட்டும் என்று கடானா உறுதியளித்தாகவும் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது!!
Next post ஊர்பஞ்சாயத்தில் தந்தைக்கு கொடூர தண்டனை: மகளை கற்பழித்து கொலை செய்த கும்பல்!!