இன்று திருமணம்: கூடுதல் வரதட்சணை கேட்டு அடம் பிடித்த மாப்பிள்ளையை உதறிய மணப்பெண்!!

Read Time:3 Minute, 20 Second

3352ea7c-e599-45ec-9fc7-edbd7a1995cb_S_secvpfஆம்பூர் அருகே உள்ள கதவாளம் யாதவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (30) கட்டிட மேஸ்திரி. இவருக்கும் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்.

அப்போது 20 பவுன் நகை, சீர் வரிசை பொருட்களை மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணையாக கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று காலை ஆம்பூர் பாலாற்றின் கரையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர். இரு தரப்பினரும் பத்திரிக்கை அடித்து உறவினர், நண்பர்கள் வீடுகளில் கொடுத்தனர். நேற்று இரவு இரு வீட்டாரும் திருமண மண்டபத்துக்கு வந்தனர். வாழை தோரணங்கள் மின்விளக்குகளல் மண்டபம் ஜொலித்தது. விருந்தினர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மண்டபம் திருமண களை கட்டியிருந்தது.

அப்போது மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது தான் மாப்பிள்ளை சரவணன் தனது அடாவடியை காட்ட தொடங்கினார்.

இப்போதே கூடுதலாக 5 பவுன் நகை போட்டால் தான் திருமணம் செய்வேன் என்றார். அதற்கு சம்மதித்த மணப்பெண் வீட்டார் அதற்கு ஏற்பாடு செய்தனர்.

இதையறிந்த மாப்பிள்ளை உடனே ஒரு பைக் வாங்கி தாருங்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கும் பெண் வீட்டார் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதற்கு பின் பெண் பெயரில் 10 சென்ட் நிலத்தை எழுதி இப்போதே எழுதி தாருங்கள் இல்லாவிட்டல் திருமணம் நடக்காது எனக் கூறியதாகத தெரிகிறது.

மாப்பிள்ளையின் அடுத்தடுத்த அடாவடியால் கலங்கி போன பெண் வீட்டார் மாப்பிள்ளையை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

ஆனால் நிலத்தை எழுதி வைத்தால் தான் தாலி கட்டுவன் எனக் கூறி மாப்பிள்ளை அடம் பிடித்துள்ளார்.

இந்த செய்தி மணப்பெண் காதுக்கு சென்றது. சுதாரித்து கொண்ட அவர் வரதட்சணை கேட்டு அடம் பிடிக்கும் மாப்பிள்ளை தனக்கு வேண்டாம் எனக் கூறி மாப்பிள்ளையை உதறினார்.

இதனையடுத்து பெண் வீட்டார் மணப் பெண்ணை அழைத்துக் கொண்டு விட்டுக்கு சென்றனர்.

இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றது.

மாப்பிள்ளை வீட்டாரும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டனர்.

இந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது மோசமான உடல் பாதிப்புக்களையும் மீறி கணக்காளராகவும் பேச்சாளராகவும் மாறி சாதனை!!
Next post புதுச்சேரியில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய வழக்கு: 8 போலீசார் பணியிடை நீக்கம்!!