கன்னியாகுமரி அருகே 7 வயது சிறுமி மர்மச்சாவு!!
நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி நதியா(வயது 28). இவர்களுக்கு ஜெயா(7) என்ற மகள் உள்ளார்.
குடை பழுது பார்க்கும் வேலை செய்து வந்த சந்தானம் சமீப காலமாக கன்னியாகுமரி அருகே மாதவபுரம் பகுதியில் குடிசை வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுமி ஜெயா வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது அவரை நாய் கடித்து விட்டது. இதனால் அவரை பெற்றோர் ஆஸ்பத்திரியில் சேர்த்து ஊசி போட்ட னர். அதன்பின்னர் ஜெயா வுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று மாலை ஜெயா வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சிய டைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜெயாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந் ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். நாய் கடித்ததற்கு முறையாக சிகிச்சை பெறாததால் தான் சிறுமி ஜெயா இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால் ஜெயாவின் சாவில் மர்மம் இருப்பதாக சந்தானம் புகார் கூறினார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு சந்தானமும், நதியாவும் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது ஜெயாவை பக்கத்து வீட்டில் விட்டு சென்றனர். இரவில் இவர்கள் வீட்டுக்கு திரும்பினர். பெற்றோரை பார்த்ததும் பக்கத்து வீட்டில் இருந்து கதறி அழுதவாறு ஜெயா ஓடி வந்தார். எதற்காக அழுகிறாய்? என பெற்றோர் கேட்ட போது ஜெயா பதில் ஏதும் சொல்லாமல் ஏங்கி ஏங்கி அழுதார். பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இந்தநிலையில், ஜெயா நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்து இறந்திருப்ப தால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக சந்தானம் போலீசில் புகார் கொடுத்தார். தனது மகளை பக்கத்து வீட்டில் விட்டுச் சென்ற போது அங்கு ஏதோ விபரீத சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும், அதில் ஜெயா உடல் நிலை பாதிக்கப்பட்டு பலியாகி இருக்கலாம் என சந்தே கிப்பதாக அவர் புகார் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ஜெயா வின் உடலை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ஜெயா மரணம் தொடர்பாக அவரது தாயார் நதியா கொடுத்த புகாரின்பேரில் தற்கொலை வழக்குபதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
ஜெயாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதில் ஜெயாவின் சாவுக்கான உண்மை கார ணங்கள் தெரிய வரும், அதன டிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating