மனைவியின் செக்ஸ் தொல்லையால் விவாகரத்து கேட்ட கணவன்!!
மும்பையை சேர்ந்தவர்கள் சரத்-யாமினி தம்பதியர் (பெயர்கள் மாற்றித் தரப்பட்டுள்ளன). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. சிறிது காலமே யாமினியுடன் வாழ்ந்த நிலையில், அவரது செக்ஸ் தொல்லை காரணமாக சரத் மிகவும் பாதிக்கப்பட்டார். மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என கோரி மும்பை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.
வழக்கில் கூறி இருந்ததாவது: திருமணமான நாள் முதல் என் மனைவி எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தாள். அவள் அளவு கடந்த செக்ஸ் ஆசை கொண்டிருந்தாள். பிடிவாத குணம் கொண்டு, மூர்க்கத்தனமாகவும், சர்வாதிகாரி போலவும் நடந்து கொண்டாள். காரணமே இல்லாமல் என்னுடன் சண்டை போட்டு வந்தாள். எனக்கு போதை ஊசி போட்டு வந்ததுடன், மது பானம் குடிக்குமாறு கட்டாயப்படுத்தினாள். பாலுறவுக்கு மறுத்தபோதெல்லாம், தரக்குறைவான வார்த்தைகளால் என்னைப் பேசினாள். அவளது வார்த்தைகளுக்கு பயந்தே பல நேரங்களில் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.
இடைவிடாமல் 3 ‘ஷிப்டு’ களில் வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தபோது கூட செக்ஸ் தொல்லை கொடுத்தாள். நான் அதற்கு இணங்காவிட்டால், வேறு ஆணைத் தேடிப்போய் விடுவேன் என மிரட்டலும் விடுத்தாள். என் உணர்வினைப் பற்றி அவள் கவலைப்பட்டதே இல்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எனக்கு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து எனது மனைவி அவளது சகோதரி வீட்டில் நாம் இருந்து கொள்ளலாம் என கூறி கட்டாயப்படுத்தினாள். அங்கும் அவள் எனக்கு செக்ஸ் தொல்லை தந்தாள். அவளது நிலையை உணர்ந்து நான் அவளை மன நல மருத்துவரிடம் அழைத்துச்சென்று, சிகிச்சை அளிக்க விரும்பினாலும், அவள் அதற்கு சம்மதிக்கவில்லை. யாரிடமும் என்னைப்பற்றி சொன்னால், நடப்பதே வேறு என மிரட்டினாள். இனியும் அவளுடன் இணைந்து என்னால் வாழ முடியாது. எனவே எனக்கு அவளிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும். இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது யாமினி கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து, சரத்துக்கு யாமினியிடமிருந்து விவாக ரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பில் நீதிபதி, “இந்த வழக்கில் வழக்குதாரரின் மனைவி கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்குதாரரின் வாக்குமூலத்தில் மாற்றம் இல்லை. எனவே அவரது வாக்குமூலத்தை ஏற்று, அவருக்கு விவாகரத்து வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating