வியாசர்பாடி அருகே போலீசார் அடித்ததால் வாலிபர் தற்கொலை: பொது மக்கள் மறியல்!!

Read Time:4 Minute, 35 Second

b1badbd1-56fb-44d8-84ed-2a24dbc38c1f_S_secvpfவியாசர்பாடி சர்மா நகர் அருகே உள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் விக்கி என்கிற விக்ரமன். இருசக்கர வாகன மெக்கானிக். நேற்று விக்கி தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். வண்டியில் 3 பேர் பயணம் செய்தனர்.

வாகன சோதனையில் ஈடுபட்ட எம்.கே.பி.நகர் போலீசார் 3 பேரையும் பிடித்தனர். பின்னர் 2 பேரை விட்டு விட்டு விக்கியை மட்டும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு விக்கியை சப்–இன்ஸ்பெக்டர் விமல்நாதன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் விக்கி கால் முறிந்தது.

இந்த நிலையில் வீட்டுக்கு வந்த விக்கி நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது உறவினர்கள், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் அடித்ததால் தான் விக்கி தற்கொலை செய்து கொண்டார் என குற்றம் சாட்டினார்கள். ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 8 மணி அளவில் நெற்குன்றம் சாலையில் திரண்டனர். அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக ஜீப்பில் வந்த சப்–இன்ஸ்பெக்டர் மோகன் அவர்களுடன் பேச்சு நடத்தினார். ஆனால் விக்கியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கை விட மாட்டோம் என்று பிடிவாதமாக கூறினார்கள்.

அதோடு தூக்கில் தொங்கிய விக்கி பிணத்தை இறக்கவும் மறுத்தனர்.

ஆவேசம் கொண்ட சிலர் சப்–இன்ஸ்பெக்டர் மோகன் வந்த ஜீப்பை அடித்து உடைத்தனர். தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் பாலமுரளி அங்கு விரைந்து வந்தார். மறியலில் ஈடுபட்டவர்களுடன பேச்சு நடத்தினார்.

விக்கியின் அண்ணன் சுரேஷ் கூறியதாவது:–

எனது தம்பி தன் நண்பர்களுடன் பைக்கில் சென்றார். மசூதி அருகே அவர்களை எம்.கே.பி.நகர் போலீசார் 2 பேர் பிடித்து மற்றவர்களை விடித்து விட்டு எனது தம்பி விக்கியை மட்டும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அங்கு எனது தம்பியை சப்–இன்ஸ்பெக்டர் விமல் நாதன் கண்மூடித்தனமாக அடித்தார். ‘‘நான் என்ன தப்பு செய்தேன்’’ என்று எனது தம்பி கேட்டு அழுதார். ஆனால் போலீசார் அவரை விடாமல் அடித்தனர்.

அதோடு ஒரு வண்டியில் 3 பேர் பயணம் செய்ததாக கூறி ரூ.1500 அபராதமும் விதித்தனர். அதன் பிறகும் எனது தம்பியை அடித்து காலை முறித்தனர். அபராதம் செலுத்தியும் என் தம்பியை ஏன் அடித்தார்? என்று தெரியவில்லை. அந்த சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எனது தம்பியின் பிணத்தை இறக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மறியல் செய்தவர்களுடன் துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் பரந்தாமன், இன்ஸ்பெக்டர்கள் பால முரளி, கனகராஜ், சீனிவாசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதற்கிடையே போலீசார் தூக்கில் தொங்கிய விக்கியின் பிணத்தை இறக்கி ஆம்புலன்சில் ஏற்றினார்கள். ஆம்புலன்ஸ் சாவியை விக்கியின் தந்தை பிடிங்கி கொண்டார். சப்–இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஆம்புலன்சை விடமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார்.

போலீசார் தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடனுக்கு கேட்டதால் மோதல்: பழனி பெட்ரோல் பங்க் கேஷியருக்கு பாட்டில் குத்து!!
Next post திருச்செந்தூர் அருகே 2 குழந்தைகளுடன் தீக்குளித்த இளம்பெண் சாவு!!