மனைவியை எரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அருள்மணி(வயது 29). இவருக்கும், சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த நந்தினி என்ற ராசாத்தி என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு சேத்துப்பட்டில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் நந்தினி, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இது அருள்மணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து மனைவி நந்தினியிடம் தகராறு செய்து வந்தார்.
கடந்த 8-4-2008 அன்று வழக்கம்போல கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்மணி, வீட்டில் இருந்த மண்எண்ணெயை நந்தினி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நந்தினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக அவர் போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீசார், அருள்மணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா, நேற்று தீர்ப்பு கூறினார். அதில், கொலையான நந்தினியின் கணவன் அருள்மணிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சிவபெருமான் ஆஜரானார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating