குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைய சமூகத்தில் மனமாற்றம் வேண்டும்: யுனிசெப் அதிகாரி!!

Read Time:2 Minute, 28 Second

23aa92c0-37c8-4699-9c95-8d801fe5dd95_S_secvpfபாரதியார் பல்கலைக்கழக சமூகப்பணியியல் துறை மற்றும் தமிழ்நாடு தன்னார்வ சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் அமைப்பு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான தீங்குகள் மற்றும் சவால்கள் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

சமூக நலப்பாதுகாப்பு துறை இணை இயக்குனர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார். யுனிசெப் அமைப்பின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வித்யாசாகர் பேசியதாவது:–

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இக்குற்றங்களை ஒழிக்க போதிய சட்டங்கள் இருந்தும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் வெளியே நடப்பதைவிட குடும்ப உறுப்பினர்களால் தான் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே குடும்பத்தினருடன் எப்படி பழகுவது என்பது குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சமூகம், குடும்பம், பள்ளி, ஆசிரியர், அரசு, ஊடகம், காவல் துறை என ஒருமித்த செயல்பாடு மூலமாகவே ஒழிக்க முடியும்.

சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஒழிக்க அனைவரிடமும் மனமாற்றம் ஏற்பட வேண்டும். குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகள், பள்ளிகள் முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

பாரதியார் பல்கலைக்கழக சமூகப்பணியியல் துறைத் தலைவர் சேது ராம சுப்பையா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுந்தர நடிகரின் படத்தில் நாயகிகளுக்கு இடையே லடாய்!!
Next post மதுக்கடைகளுக்கு முகத்தை மறைத்து சென்று மதுவாங்கும் பெண்கள்: நடவடிக்கை எடுக்க கொ.ஜ.க.கோரிக்கை!!