அருப்புக்கோட்டை அருகே பாலிடெக்னிக் மாணவி கற்பழிப்பு!!

Read Time:2 Minute, 5 Second

3688d4cc-2284-4dd2-b8e5-1f60bfca59d1_S_secvpfஅருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் விக்டர். இவரது மகள் ருஸ்மி (வயது19). இவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவருக்கும், பந்தல்குடியை சேர்ந்த அங்குசாமி மகன் தாமரைசெல்வன் (24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள் தனிமையில் சந்தித்து வந்தனர்.

அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ருஸ்மியுடன் தாமரைசெல்வன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ருஸ்மி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து அவர் காதலன் தாமரைசெல்வனிடம் கூறி திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையல் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ருஸ்மிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. நேற்று ருஸ்மி அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில், காதலன் தாமரைச்செல்வன் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி என்னை கற்பழித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு உடந்தையாக இருந்த தாமரைசெல்வனின் தாயார் விஜயலட்சுமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது!!
Next post காதல் முறிவு உண்மை – அவளுடனே இருக்கட்டும்..!!