வேலைதேடி வந்தவரை தாக்கி நகை-பணம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது!!

Read Time:1 Minute, 48 Second

02d41d05-15f2-4b15-a0e1-2b0830f07ef5_S_secvpfபெரம்பலூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 28). இவர் கோவைக்கு வேலை தேடி வந்தார். நேற்று இரவு காந்திபுரம் பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் டெக்ஸ்டூல் மேம்பாலம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே இருட்டான பகுதிக்கு சென்றபோது 3 பேரும் சேர்ந்து சிவக்குமாரை தாக்கினர். சிவக்குமார் அணிந்திருந்த ½ பவுன் மோதிரம், சட்டைப்பையில் வைத்திருந்த ரூ. 1,200 ரொக்கப் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சிவக்குமார் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையிலான போலீசார் சிவக்குமாரிடம் நகை, பணம் பறித்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்தனர்.

அப்போது காந்திபார்க் பகுதியை சேர்ந்த மணிராஜ் (17), சுங்கம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (22), செட்டி வீதியை சேர்ந்த நாகராஜன் (17) ஆகியோர் சிவக்குமாரிடம் நகை, பணம் பறித்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை–பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணை கடத்திய வாலிபர் மீது புகார்!!
Next post தந்தை கண்டித்ததால் தீக்குளித்த பிளஸ்–1 மாணவர் கிணற்றில் குதித்து சாவு!!