காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்: தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!

Read Time:4 Minute, 21 Second

9ea83edf-6240-4dbb-9843-34c63df983ef_S_secvpfசேலம் சூரமங்கலம் அருகில் உள்ளது நரசோதிப்பட்டி. இந்த பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 25). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இந்த பெண்ணுக்கு வருகிற 29–ந்தேதி சேலத்தில் திருமணம் நடக்க நிச்சயம் நடந்தது.

இதை அறிந்த மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், அந்த பெண்ணை அழைத்து ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? என்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வது சரியா? என கூறி டார்ச்சர் செய்துள்ளார். அப்போது அந்த பெண் தனது பெற்றோர் தான் முக்கியம். அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதன்படித்தான் நடப்பேன். இனி என்னை தொடர்பு கொள்ளவேண்டாம் என கூறி சென்று விட்டார்.

இதனால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன் நேற்று வீட்டில் வைத்து இருந்த தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதன்படி தூக்க மாத்திரையை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதை அறிந்த அவரது வீட்டார் மணிகண்டனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதை கேள்விப்பட்ட மணிகண்டனின் நண்பர்களும், உறவினர்களும் நேற்று இரவு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் திடீரென சாலைமறியில் ஈடுபட்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த சேலம் டவுன் உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சாலைமறியல் செய்த இடத்திற்கு வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.

அப்போது அவர்கள், மணிகண்டன் விரும்பிய பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்யப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். அந்த பெண் விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்க கூடாது என்றனர். இதையடுத்து உதவி கமிஷனர் ராஜேந்திரன் உடனே நரசோதிப்பட்டிக்கு சென்று மணிகண்டன் காதலித்த பெண் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்தார். அப்போது அந்த பெண், என் சம்மதத்துடன் தான் திருமணம் நடக்கிறது. கட்டாய திருமணம் நடக்கவில்லை. என்னை யாரும் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

பின்னர் உதவி கமிஷனர் ராஜேந்திரன் சாலைமறியல் செய்தவர்களிடம் வந்து அந்த பெண் தெரிவித்த தகவல்களை கூறினார். அந்த பெண் விருப்பப்படித்தான் திருமணம் நடக்கிறது. உறவினர்கள் வேண்டும் என்றே சாலைமறியல் செய்கிறீர்கள். இதுதவறு. அந்த பெண்ணிற்கு நிச்சயம் ஆகி விட்டது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் என அறிவுரை கூறினர். இதை ஏற்று சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். தற்கொலைக்கு முயன்ற மணிகண்டனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?
Next post கணவர், மாமியார் கொடுமை: கருணை கொலை செய்ய வேண்டி கலெக்டரிடம் பெண் மனு!!