எப்படியான ஆண்களை காதலிக்கலாம் ?

Read Time:1 Minute, 48 Second

Love-Shayariநீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும். காதல் என்பது திருமணம் என்ற புனிதமான ஒரு நிலையை நோக்கி உங்களை கொண்டு செலுத்தும் ஒரு சக்தி, அதனால் காதல் விஷயத்தில் எச்சரிக்கை மனப்பான்மை வேண்டும்.

உங்களை காதலிப்பதாகக் கூறும் இளைஞன் உங்கள் அழகை மட்டுமே வர்ணிப்பவனாக இருந்தால் அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் உங்கள் அழகு எந்தச் சமயத்திலும் பின்னாளில் குறையக்கூடும்.

திருமணமான பிறகு அழகு குறைந்தபோது உங்களிடம் கவர்ச்சியை எதிர்பார்த்த இளைஞன் ஏமாற்றமுற்று தடம் மாறக்கூடும். அழகாக கவர்ச்சியாக இருக்கிறான் என்பதற்காக எந்த ஓர் இளைஞனையும் பெண்கள் காதலிக்கக் கூடாது. அழகு என்பது இனிப்பு பலகாரங்களுக்கு போடப்படும் வண்ணம் போன்றது.

வண்ணம்தான் பண்டத்திற்குக் கவர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் வண்ணம் இல்லாததினாலேயே தின்பண்டத்தின் சுவை கெட்டுவிடப் போவதில்லை. தின்பண்டத்தில் கலந்துள்ள இனிப்பு போன்றது ஓர் இளைஞனின் குண நலன்கள். இனிப்பு இல்லாவிட்டால் தின்பண்டமே இல்லை என்பது போல, வாழ்க்கைக்கு எழில் சேர்ப்பது கணவராக வருபவரின் குணநலன்தான். ஆகவே தங்கள் காதல் ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலனை கொன்றவர்களை தண்டிக்க வேண்டும்: இளம்பெண் கதறல்!!
Next post பெண்ணை தூக்கிச்சென்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: திருப்பூர் கோர்ட்டு அதிரடி!!