70 வயது பெண்ணை கொடுமைப்படுத்திய இலங்கை பெண் சார்ஜாவில் கைது!!

Read Time:2 Minute, 11 Second

42325580m2சார்ஜா நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இலங்கை பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பணியாற்றிய வீட்டில் 70 வயதான வயோதிப பெண்ணை துன்புறுத்தி கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

70 வயது நிரம்பிய ஆயிஷா என்பவரின் மகனான ஓமார் என்பவர், தனது தாயை கவனித்து பராமரித்து வீட்டு வேலைகளை செய்வதற்காக இந்த இலங்கை பெண்ணை நியமித்திருந்தார்.

70 வயதான தனது தாயை பிள்ளையை போல் இலங்கை பெண் உபசரித்து வந்துள்ளதாக சார்ஜா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இலங்கை பெண், தனது தாயை சரியாக கவனிக்காது, தனது எண்ணம் போல் செயற்பட்டுள்ளதுடன் ஆத்திரப்பட்டவராக நடந்து கொண்டுள்ளதாக மகன் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெண் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாகவும் அவர் தனக்கு தொந்தரவுகளை செய்தது மாத்திரமல்லாது வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாகவும் இலங்கை பெண் கைது செய்யப்பட்ட பின்னர், வயோதிப பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் தேவதையை போல் இலங்கை பெண் நடந்து கொண்டதாகவும் பின்னர் பிசாசு பிடித்தவர் போல் நடந்து கொண்டதாகவும் அந்த வயோதிப பெண் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தான் செய்த தவறுக்கு வருந்துவதாகவும் மீண்டும் அந்த வீட்டுக்கே செல்ல இடமளிக்குமாறு இலங்கை பெண் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் குற்றச்சாட்டு – 278 வருட தண்டனை – டாக்டர் கைது!!
Next post இரும்பு குதிரை ரிலீஸ்?