செயற்கை மார்பகங்களுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்!!

Read Time:2 Minute, 5 Second

article-2725984-208C4E0400000578-704_634x395தனது செயற்கை மார்பகங்களுக்குள் 70,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான கொக்கேயின் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்ணொருவரை ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெனிசுலாவை சேர்ந்த மேற்படி 43 வயது பெண் 3.75 இறாத்தல் நிறையுடைய இரு பிளாஸ்டிக் மார்புகளில் வைத்து ஸ்பெயினுக்கு கடத்தி வந்த வேளை மட்றித் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலம்பிய பொகோட்டா நகரிலிருந்து விமானத்தில் மட்றித் விமான நிலையத்தை வந்தடைந்த அந்த பெண்ணின் வழமைக்கு மாறான பதற்றமான நடத்தையால் தன்னை சந்தேகம் கொண்டு அவர் எடுத்து வந்த பயணப்பொதிகளை சோதனைக்குட்படுத்திய விமான நிலைய பெண் உத்தியோகத்தர்கள் அந்த பொதிகளில் எவற்றையும் கண்டுபிடிக்காத நிலையில் அவரது உடலை முழுமையாக சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண்ணின் மார்பகங்கள் வழமைக்கு மாறான வடிவமைப்புடன் வெட்டுக்காயத்தழும்புடன் காணப்படுவதை அவதானித்த அந்த உத்தியோகத்தர்கள் அந்த பெண் பயணியை தீவிர விசாரணைக்குட்படுத்திய போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து பொலிஸாரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அந்த பெண்ணின் செயற்கை மார்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைவஸ்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குண்டு உடலுக்கு ஆசைப்பட்டு சென்னை வந்த சூடான் வாலிபரின் கண்ணீர் கதை!!
Next post கடத்தி சென்ற யாஸிதி இளம்பெண்களை மதம் மாற்றி திருமணம்: ஐ.எஸ். போராளிகள் ஏற்பாடு!!