சீருடையில் வரும் பள்ளி மாணவர்களுக்கும் மது விற்கும் டாஸ்மாக் ஊழியர்கள்!!

Read Time:3 Minute, 51 Second

f049aee8-c2ef-436f-862e-8bceb452a9c8_S_secvpfஈரோடு மாவட்டத்தில் 254 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் சராசரியாக ரூ. 1 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை ஆகின்றன. விசேஷ காலங்களில் இதன் விற்பனை மேலும் அதிகரிப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்,

இதில் சில மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மது விற்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இதனால் மது பான கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்றும், வாங்கும் சரக்குகளுக்கு கம்ப்யூட்டர் பில் கொடுக்க வேண்டும் என்றும் குடிமகன்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் கவலைப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் பள்ளி –கல்லூரி மாணவர்களும் போதைக்கு அடிமையாவது தான்.

,இவர்கள் ‘‘நண்பர்கள் அழைக்கிறார்கள். கம்பெனி கொடுத்துதான் பார்ப்போமே’’ என்று தொடக்கத்தில் தயங்கி….தயங்கி கொஞ்சமாக பீர் குடிக்கிறார்கள். பிறகு போக போக போதைக்கு அடிமையாக அதை விட முடியாமல் அதிகமாக குடித்து தங்களது உடல் நலத்தையும் கெடுத்து கொள்கிறார்கள்.

அதுவும் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நேரடியாக கடைக்கு டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்குகிறார்கள்.

பஸ் நிலையத்துக்கு எதிரே உள்ள திருமண மண்டபங்கள் எதிரே உள்ள டாஸ்மாக் கடைகளில் 10–க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அதுவும் பள்ளி சீருடையிலேயே பீர் மற்றும் மது பானங்களை வாங்குவதை கண்கூடாக பார்க்க முடிந்தது.

சிறிது கூட கூச்சமோ, பயமோ இல்லாமல் மது வாங்கிய அவர்கள் அந்த மது பாட்டில்களை புத்தக பையினுள் மறைத்து வைத்து கொண்டு சென்றதுதான் பெரும் வேதனைக்குரிய விஷயமாகும்.

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்பதற்கு தடை உள்ளது. ஆனால் சில டாஸ்மாக் கடை ஊழியர்களோ அவர்களிடம் பணத்தை பெற்று கொண்டு மது பானங்களை விற்பனை செய்கிறார்கள்,

இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும் போது, பள்ளி செல்லும் மாணவர்கள் முன்பு பெற்றோரிடம் வாங்கும் சில்லரை காசுகளை உண்டியலில் சேமித்து வைத்து தங்களுக்கு வேண்டிய புத்தகம் மற்றும் பொருட்களை வாங்குவார்கள். ஆனால் இப்போது அந்த காலம் எல்லாம் மாறி போச்சு… பெற்றோரிடம் வாங்கும் பணத்தை வைத்து தண்ணி அடிப்பது இப்போது பேஷனாகி விட்டது. இதற்கு காரணம் அவர்களின் கூடா நட்பு தான்.

இப்படிபட்ட மாணவர்களை கண்காணித்து அவர்களது பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி திருத்த வேண்டும். எனவே பெற்றோர்களே உஷார்…. உஷார்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாமக்கல் அருகே கிணற்றில் ஆண் பிணம்!!
Next post தூக்க கலக்கத்தில் விபரீதம்: ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பெண்!!