ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் நோயாளியின் வயிற்றில் அறுந்து விழுந்த மின்விசிறி!!

Read Time:1 Minute, 48 Second

2022f15a-eedd-4f16-a7f0-0c753dd3e5fd_S_secvpfசென்னை பெரியமேட்டை சேர்ந்தவர் ஆரிப் (வயது 32). குடல் இரக்கம் (ஹெர்னியா) பாதிப்பால் அவதிப்பட்ட அவர் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

புதிதாக கட்டி திறக்கப்பட்ட 10 மாடி கட்டிடத்தில் 3–வது தளத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று வார்டில் படுக்கையில் ஆரிப்படுத்திருந்தபோது அவருக்கு மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி திடீரென அறுந்து விழுந்தது.

அவரது வயிற்று பகுதியில் விழுந்ததால் அவர் அலறினார். இதைப்பார்த்த மற்ற நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

சிகிச்சை பெறும் நோயாளியின் மீது மின் விசிறி விழுந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி முழுவதும் பரபரப்பானது. இதில் ஆரிப்புக்கு எவ்வித காயம் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் அவர் வேறுபடுக்கைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, மின்விசிறி நோயாளியின் மீது விழவில்லை. கீழே தான் விழுந்தது. இதுபற்றி பொதுப்பணித்துறை என்ஜீனயரிடம் விளக்கம் கேட்டு இருக்கிறோம்.

மின் விசிறியல் உள்ள ‘பியரிங் சிக்கி கொண்டதால் இந்த சம்பவம் நடத்துள்ளது’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்!!
Next post பழைய வண்ணாரப் பேட்டையில் மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது போலீசில் புகார்!!