முழுக்க முழுக்க ரோபோக்களால் நிர்வகிக்கப்படும் சீன உணவகம்!!
சீனாவில் தொழிலாளர் செலவினங்கள் அதிகரித்துவருவதால் உற்பத்தியாளர்களை தானியங்கி ரோபோ செயல்பாட்டை அதிகரிக்கத் தூண்டியது. இந்த நிலையானது கடந்த வருடம் தொழில்துறையில் அதிக அளவிலான ரோபோக்களைப் பயன்படுத்தியதில் ஜப்பானைவிட சீனாவை முன்னிலையில் இருத்தியது. இந்த முன்னேற்றத்தின் வெளிப்பாடாக கடந்த வாரம் சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் உள்ள குன்ஷன் நகரத்தில் தொடங்கப்பட்டுள்ள உணவகம் ஒன்று முழுக்க முழுக்க ரோபோக்களால் நிர்வகிக்கப்படுகின்றது.
உணவகத்தின் வாசலில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு ரோபோக்கள் வணக்கம் கூறி வாடிக்கையாளர்களை வரவேற்க, நான்கு ரோபோக்கள் உணவு பரிமாற, சாப்பிட்ட இடத்தினை சுத்தம் செய்யும் பணியினைக் கவனிக்கின்றன. சமையலறையில் இரண்டு பெரிய ரோபோக்கள் அனைத்து உணவுகளையும் திறம்படத் தயாரிக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இங்கு வரும் மக்களுக்கு இந்த ரோபோக்களின் நடவடிக்கைகள் ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.
கடந்த 2012ல் அந்நாட்டின் வடகிழக்கு நகரமான ஹர்பினில் தொடங்கப்பட்ட ஒரு உணவகத்தை முன்மாதிரியாகக் கொண்டு தான் இதனைத் தொடங்கியதாக இந்த உணவகத்தின் உரிமையாளர் சோங் யுகங் தெரிவித்தார். ஒவ்வொரு ரோபோவும் 40,000 யுவான் விற்பனை விலை கொண்டவை என்ற யுகங், தினசரி உபயோகப்படுத்தும் 40 வாக்கியங்களை இவை புரிந்துகொள்ளும். உடல்நலக் குறைவோ, விடுமுறைக்கான அவசியமோ இவற்றுக்கு ஏற்படாது. இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரம் வேலை செய்யும் திறன் கொண்டவை இவை என்று கூறினார்.
தன் மகளுக்கு வீட்டுவேலைகள் செய்யப் பிடிக்காது என்பதால் இவ்வாறான ஒரு திட்டத்தை செயல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating