தவறுதலாக 200 நோயாளிகளை இறந்தவர்களாக அறிவித்த ஆஸ்திரேலிய மருத்துவமனை!!

Read Time:2 Minute, 8 Second

fd5eca5b-6c78-4615-9fac-eed52930ce3d_S_secvpfஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது.

தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும் தகவல் குறிப்புகளில் கவனக்குறைவாக இதுபோல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று இம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், மேலும் இந்தத் தவறு குறித்து அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது. இதனால் நோயாளிகளின் கவனிப்பு பாதிக்கப்படவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவித்தது.

இந்தத் தவறு ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என்று கூறிய ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம், இதனால் பணியில் இருந்த மருத்துவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றது. எதிர்த்தரப்பு உறுப்பினர்களோ சுகாதார அமைப்பின் அதிகப்படியான வேலைப்பளுவை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகின்றது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழுக்க முழுக்க ரோபோக்களால் நிர்வகிக்கப்படும் சீன உணவகம்!!
Next post விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலேசிய ஏர்லைன்ஸ் ஊழியர்!!