தங்கையுடன் ஆபாசப் படம் பார்த்த 15 வயது மகனை கைதுசெய்யுமாறு தாய் அடம்!!

Read Time:1 Minute, 49 Second

1803018356Untitled-1அமெரிக்காவில் வீட்டில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததற்காக தனது 15 வயது மகனைப் பொலிசில் பிடித்துக் கொடுக்க தாயே முயற்சித்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த சாவோண்டா கால்மேன் (40) என்ற பெண்மணி ரியல் எஸ்டேட் ஏஜண்டாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய சாவேண்ட், தனது 15 வயது மகன் இரண்டு வயது தங்கையை மடியில் அமர வைத்தவாறு, தொலைக்காட்சியில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டார்.

உடனடியாக அவசர எண் 911-க்கு தகவல் தெரிவித்தார் சாவோண்டா. ஏதோ அசம்பாவிதம் நடந்ததாக நினைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் பொலிசார்.

ஆனால், தனது மகன் ஆபாச படம் பார்ப்பதாகவும், அதனால் அவனை கைது செய்து சிறையில் அவர்களிடம் அடையுங்கள் எனத் தெரிவித்துள்ளார் சவோண்டா.

அமெரிக்க சட்டப்படி வீட்டில் தனியாக உட்கார்ந்து ஆபாச படம் பார்ப்பது குற்றமாகாது. எனவே, சட்டப்படி தங்களால் அச்சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்றும், மாறாக அமைதியான முறையில் மகனுக்கு அறிவுரை சொல்லுமாறு சவோண்டாவிடம் வலியுறுத்தி விட்டு சென்றனர் பொலிசார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலேசிய ஏர்லைன்ஸ் ஊழியர்!!
Next post மருதாணி இல்லை! வரதட்சணை வாங்கிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன்!!