கோவாவின் ஒவ்வொரு கிராமத்திலும் எச்.ஐ.வி. நோயாளிகள்: மந்திரி பேச்சு!!

Read Time:1 Minute, 37 Second

f65e8cdb-8067-4cb2-88ca-400a1bb0a28a_S_secvpfகோவாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி லஷ்மிகாந்த் பர்சேகர் கூறியுள்ளார்.

கோவா சட்டமன்றத்தில் இன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நிலேஷ் கேப்ரல் எச்.ஐ.வி. நோய் குறித்து கேள்வியெழுப்பினார். அவருக்கு பதிலளித்து லஷ்மிகாந்த் கூறுகையில், மாநிலத்தில் 15000 மக்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இது மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் ஆகும் என்று தெரிவித்த அவர் எச்.ஐ.வி.யால் பாதிக்காதவர்கள் இல்லாத கிராமங்களே மாநிலத்தில் இல்லை என்ற அதிர்ச்சி தகவலை கூறினார்.

எனினும் 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகவே உள்ளதாக அவர் அவையில் தெரிவித்தார். 2003 லிருந்து 2008 வரை ஆண்டொன்றுக்கு 1000 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 2009க்குப் பிறகு ஆண்டொன்றுக்கு 550 பேர் தான் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூரில் ஈவ் டீசிங் செய்தவனை எட்டி உதைத்த பெண்!!
Next post ஒரே பார்வையில் சமந்தாவை காதலில் விழவைத்த நோரி!!