விடுதியில் மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் கைது!!
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கொடி(வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் தஞ்சை தமிழ்பல்கலை போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:–
நான் தஞ்சையில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பில் சேர்ந்தேன். சேரும் போது தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்றும், மாணவிகளுக்கு பாதுகாப்பாக தங்கும் விடுதிவசதிகள் உள்ளன என்றும் கல்லூரி தாளாளர் ராவணன் கூறியதை நம்பி எனது பெற்றோர் அவர்கள் விடுதியில் தங்கி படிக்க வைத்தனர்.
பின்னர் கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் கல்லூரி எந்தவித அங்கீகாரமும் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதேபோல் விடுதி என்ற பெயரில் கல்லூரி தாளாளரின் வீட்டின் பின்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்ட ஒரு சிறிய அறையில் தங்க வைத்தனர். என்னுடன் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் பலர் தங்கியிருந்தனர்.
அவர்கள் அனைவரும் 17 வயது முதல் 18 வயதிற்குள்ளான மாணவிகள். கடந்த ஜூலை மாதம் ஒருநாள் எங்களது கல்லூரி உரிமையாளர் ராவணன் நாங்கள் குளிக்கும் குளியறை அருகே வந்தார். அப்போது நான் அவரை மறைந்திருந்து பார்த்தேன். அவர் மாணவிகள் குளிக்கும் போது எட்டி பார்த்து கொண்டிருந்தார். அதைக்கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
அதன் பின்னர் எந்த மாணவி குளித்தாலும் அவர் எட்டிப்பார்ப்பதை நாங்கள் பார்த்தோம். இதை நாங்கள் வெளியில் சொன்னால் எங்களுடைய பள்ளி படிப்பு அசல் சான்றிதழ்களை எதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் வெளியில் சொல்லாமல் இருந்தோம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் தஞ்சை தமிழ்பல்கலை கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரத்தினாம்பாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் மீது பெண் வன்கொடுமை, பெண் மானபங்கம், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்கள் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ராவணனை கைது செய்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating