அதர்வாவின் ஆக்ஷனால் அலரிய ப்ரியா ஆனந்த்!!
அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த் நடித்துள்ள படம் இரும்புக்குதிரை. இந்த படத்தில் பைக் ரேசராக நடித்துள்ளார் அதர்வா. அஜீத் ஒரு பைக ரேசர் என்பதால் அவரை தூரத்தில் நின்று ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே ஒரு படத்தில் பைக் ரேசராக நடித்திருக்கிறேன். இது சந்தோசம்தான் என்றாலும், அந்த விளையாட்டு எவ்வளவு ஆபத்தானது என்பதையும் அறிந்து கொண்டேன் என்கிறார்.
மேலும் இந்த படத்தில் கெத்தான வில்லனாக நடித்துள்ள ஜானியுடன், பைக்கில் பயணித்தபடி ஒரு சண்டை காட்சியில் நடித்துள்ளாராம் அதர்வா. அந்த காட்சியில் கதைப்படி அதர்வாவின் காதலியான ப்ரியாஆனந்தும் பைக்கிற்கு பின்னால் உட்கார்ந்திருப்பாராம். அப்போது பைக்கை வேகமாக ஓட்டியபடி அதர்வா நடித்தபோது அவரை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த ப்ரியாஆனந்த் பயத்தில் அவ்வப்போது அலறிக் கொண்டேயிருந்தாராம்.
ஒருகட்டத்தில் அவரது அலறல் அதிகமாகி விட்டது என்றாலும், கதைப்படி அவர் அதர்வாவுடன் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்ததால் அவரையும் வைத்து படமாக்கினார்களாம்.
அப்போது ஒருமுறை, பைக் ஒரு மரத்தில் மோதி அதர்வாவும், ப்ரியாஆனந்தும் கீழே விழும் காட்சியில் நிஜமாலுமே கீழே விழுந்து உருண்டு விட்டாராம் ப்ரியாஆனந்த். அவரது கையில்கூட சின்னச்சின்ன சிராய்ப்பு ஏற்பட்டு விட்டதாம்.
அதையடுத்து, அவருக்கு உடனடியாக மருந்திட்டு ஓய்வு கொடுத்தார்களாம். அப்போது, சண்டைகாட்சி ஹீரோவுக்கும், வில்லனுக்கும் தானே என்னையும் எதுக்கு கூடவே அனுப்புறீங்க என்று டைரக்டரிடம் வாக்குவதம் செய்தாராம் ப்ரியா. அதன்காரணமாக, பாதி பைட் சீனுக்கு பிறகு அவரை அதர்வா கீழே இறக்கி விடுவது போன்று ஒரு ஷாட் எடுத்து விட்டு, ப்ரியாஆனந்துக்கு பைட் சீனில் இருந்து அவுட் கொடுத்தார்களாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating