சித்தார்த் – சமந்தா காதலில் விரிசலா?

Read Time:2 Minute, 40 Second

Untitled-1110தெலுங்கில் சித்தார்த்-சமந்தா இருவரும் நடித்த முதல் படத்திலிருந்தே அவர்களை இணைத்து காதல் செய்திகள் பரவத் தொடங்கி விட்டது.

அதற்கேற்ப இருவரும் இணைந்து காளஹஸ்தி, திருப்பதி உள்ளிட்ட சில கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகளை நடத்தியதால் அந்த செய்திகள் இன்னும் ஆதாரப் பூர்வமாக வெளிவந்தன.

அதுமட்டுமின்றி, சமந்தாவின் கால்சீட் விவகாரங்களை சென்னையில் இருக்கும் சித்தார்த்தின் தந்தைதான் கவனித்து வருகிறார் என்ற செய்திகளும் பின்னர் வெளியாகின. அந்த நேரத்தில் சில ஆந்திர மீடியாக்கள், சமந்தாவை எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்? என்று சித்தார்த்திடம் கேட்டபோது, என் பர்சனல விசயம் பற்றி கேட்காதீர்கள். அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள நான் தயாராக இல்லை என்று மறுத்து விட்டார்.

ஆனால், அதையடுத்து, தமிழ், தெலுங்கு படங்களில் சமந்தா பிசியாகிவிட்ட நிலையில், அவர்கள் அவ்வப்போது சினிமா விழாக்களில் கலந்து கொள்வதைகூட தவிர்த்து விட்டனர். இந்த நிலையில், சிலர் சித்தார்த்-சமந்தா உறவில் விரிசல் விழுந்திருப்பதாக பேசிக்கொள்கின்றனர்.

அதற்கேற்றார்போல், சமீபத்தில் சென்னையில் மீடியாக்களை சந்தித்து பேட்டி கொடுத்த சித்தார்த்திடம், திருமணம் குறித்த கேள்வி கேட்டபோது, அடுத்த வருடம் செய்து கொள்வேன் என்று சொன்னவர், இன்னும் பெண் யாரென்று முடிவு செய்யவில்லை என்று சொன்னார். சமந்தாவை பற்றித்தான் மீடியாக்கள் கேட்கிறார்கள் என்பது தெரிந்தும் அவர் பேச்சுக்கே வராமல் பதிலை வேறு பக்கமாக திருப்பி விட்டார்.

இதையடுத்து, ஒருவேளை சித்தார்த்-சமந்தா காதலில் விரிசல் விழுந்திருக்குமோ என்று கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணை குத்திகொன்று நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை!!
Next post மக்கள் தூக்கத்தை விட முக்கியத்துவம் கொடுப்பது எதற்குத் தெரியுமா?