பரபரப்பான ஆட்டத்தில் டோகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு பிரான்சு தகுதி

Read Time:2 Minute, 24 Second

Foot-France.jpgஉலக கோப்பை கால்பந்தில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதன் `ஜி’ பிரிவில் பிரான்சு-டோகா அணிகள் மோதின. பிரான்சு அணி தான் மோதிய 2 ஆட்டங்களையும் டிராவில் முடித்திருந்ததால் 2-வது சுற்றுக்கு முன்னேற நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கியது. ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் பிரான்சு அணி கோல் அடித்தது. ஆனால் இது `ஆப்சைடு’ என அறிவிக்கப்பட்டது. அடுத்து இருமுறை பிரான்சு வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சியை டோகா கோல்கீப்பர் அகாசா தடுத்தார். முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.

இதனால் 2-வது பாதியில் பிரான்சு வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினார்கள். ஆட்டம் டிராவில் முடிந்து பிரான்சு வெளியேற்றப்படுமோ எனற பரபரப்பின் உச்சத்தில் 55-வது நிமிடத்தில் பிரான்சின் ரிபரி கொடுத்த பாசின் மூலம் தியரி ஹென்றி அருமையாக கோல் அடித்தார். இதனால் பிரான்சு முன்னிலைப் பெற்றது.

அதன் பிறகு அந்த அணி எழுச்சியுடன் ஆடத் தொடங்கியது. இதன் பயனாக 61-வது நிமிடத்தில் பிரான்சு மேலும் ஒரு கோல் போட்டது. இதை தியரி ஹென்றி அடித்தார். டோகா அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட திருப்ப முடிய வில்லை. முடிவில் 2-0 என்ற கணக்கில் பிரான்சு வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பிரான்சு 5 புள்ளிகளுடன் ஜி பிரிவில் 2-வது இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறியது. பிரான்சு தனது நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினை 27-ந் தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஹேனோவரில் நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இடி மழையின்போது செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்கும் அபாயம்
Next post விமானப்படையினருக்கு ஆயுத விநியோகம் தலைநகரில் பலமணிநேரம் வாகன நெருக்கடி