சாப்பிட்ட உடனே செக்ஸை ஆரம்பிக்காதீங்க..!!

Read Time:4 Minute, 17 Second

couple-lyingஉணவுக்கும் உறவுக்கும் தொடர்புண்டா என்று கேட்டால் உண்டு என்கின்றனர் உளவியலாளர்கள். நாம் உண்ணும் உணவு நம் உடலில் செயல்புரிந்து நம்முடைய பாலுணர்வை தூண்டுகின்றனவாம்.

அதனால்தான் பாலுணர்வில் ஈடுபாடு இன்றி இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த உணவுகளைக் கொடுத்து தயார் படுத்துகின்றனர். அதேபோல் இதயத்திற்கு இதம் தரும் உணவுகள் எல்லாம் தாம்பத்ய உறவுக்கு ஏற்ற நலம் தரும் உணவுகள்தான் என்கின்றனர் நிபுணர்கள். இதோ அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

என்னென்ன சாப்பிடலாம்…
செக்ஸ் குறைபாடு இருந்தால் மருத்துவரிடம் சென்று லட்சக்கணக்கில் அழவேண்டாம் வீட்டில் சரியான சத்தான உணவுகளை சமைத்து உண்டாலே போது தம்பதியரிடையே தொடர் வெற்றிதான் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்டுகள்.
தம்பதியரிடையே தடுமாற்றமில்லாத தாம்பத்ய வாழ்க்கை அமைய அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும் எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.
அசைவத்தில் மட்டன், சிக்கன், மீன் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், சைவத்தில் பீன்ஸ், கீரைகள், ஸ்ட்ராபெர்ரீஸ், தர்பூசணி, முருங்கைக்காய், வெங்காயம் போன்ற உடலுக்கு உற்சாகம் தரும் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சாப்பிட உடனே ஆரம்பிக்காதீங்க…
உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உடலுறவு கொள்ளக்கூடாது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கையாகும். இதனால் மூட்டு வலி போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்படும். எனவே உணவு உட்கொண்ட பின்னர் சிவக்க சிவக்க வெற்றிலை போட்டு தங்களை தயார் படுத்திக்கொள்ளலாம். வெற்றிலை பிடிக்காதவர்கள் பாதம் பால், அல்லது உற்சாகம் தரும் மசாலா பால் அருந்தலாம்.

பொறுமை அவசியம்…
தாம்பத்ய உறவின் போது தம்பதியர் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அப்பொழுதான் அது இனிய சங்கீதமாக மாறி சந்தோசத்தைத் தரும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எதற்கோ ஆசைப்பட்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந்துகளை உண்ணக்கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

எதற்கும் எல்லை உண்டு…
தாம்பத்ய வாழ்க்கையில் கணவன் மனைவியரிடையில் கருத்துவேறுபாடுகள், மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்றவை ஏற்படும். அதனை நீடிக்க விடாமல் பரஸ்பரம் புரிதலோடு பேசித் தீர்க்க வேண்டும். மேலும் ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரி. அதேபோல் வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையரையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்துகொள்வது முக்கியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்காசி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தப்பி ஓட்டம்!!
Next post பெண்ணை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் கைது!!