இளைஞர்களே எயிட்ஸ் தொடர்பில் அவதானம்!!

Read Time:2 Minute, 13 Second

411639919Untitled-1மத்தியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களில், நூற்றுக்கு 25 வீதமானவர்கள் 15 முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாவர்.

மேலும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காக 110 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

மேலும் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் இந்த வருடம் உயிரிழந்தாக தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 1950 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 3000 முதல் 5000 பேர் வரையான எயிட்ஸ் நோயாளர்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

பலர் தமக்கு எச்.ஐ.வி. தொற்றி உள்ளது என்பதை அறியாது இருப்பது பாரதூரமான பிரச்சினை எனவும் சிசிர லியனனே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு கொண்டவர்கள் எச்.ஐ.விக்கான இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே மரத்தில் காய்க்கும் 40 ரக பழங்கள்!!
Next post இளம் காதலியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன் கைது!!