பிரசாந்துடன் தான் கடைசி – இனி இல்லை!!
குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நர்கிஸ் ஃபக்ரி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவுக்கும், செக் குடியரசைச் சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்தவர் நர்கிஸ் ஃபக்ரி.
அமெரிக்காவில் உள்ள குயீன்ஸ் பகுதியில் பிறந்து வளர்ந்த அவர் ஒரு பிரபலமான மாடல். நர்கிஸை பார்த்த பாலிவுட்காரர்கள் பொண்ணு பரபரவென இருக்கிறதே என்று நினைத்து அவரை இந்தியா அழைத்து வந்து இந்தி படத்தில் நடிக்க வைத்தனர்.
சாஹசம்
பிரசாந்த் நடிக்கும் சாஹசம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் நர்கிஸ் ஃபக்ரி. பிரசாந்துடன் ஆடியது ஸ்பெஷலான அனுபவம் என்று தெரிவித்துள்ளார் நர்கிஸ்.
குத்தாட்டம்
சாஹசம் படத்தில் ஆடியதோடு சரி இனி எந்த படத்திலும் குத்தாட்டம் போட மாட்டேன். நடித்தால் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டிலும்
தமிழில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட கையோடு ஏன் நர்கிஸ் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று நினைக்கிறீர்களா? பாலிவுட்டில் அவரை குத்தாட்டம் போடத் தான் அழைக்கிறார்கள். இப்படியே போனால் நம்மை யாரும் ஹீரோயினாக நடிக்க வைக்க மாட்டார்களோ என்ற பயம் வந்திருக்கலாம் அவருக்கு.
சென்னை
சென்னைக்கு 2 முறை வந்துள்ளேன். முன்பு அனைத்து தென்னிந்திய படங்களும் சென்னையில் தான் எடுக்கப்பட்டன என்று எனக்கு தெரியும். நான் தமிழ் படங்களில் நடிக்க விரும்பினேன். இந்நிலையில் தான் தியாகராஜன் என்னை ஒரு பாடலுக்கு ஆட அழைத்தபோது உடனே சம்மதம் தெரிவித்தேன். இங்கு திறமையான நடிகர்கள் உள்ளனர் என்றார் நர்கிஸ்.
குயீன்
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கங்கனா ரனாவத் நடித்த இந்தி படமான குயீனின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். தமிழில் கங்கனா கதாபாத்திரத்தில் நர்கிஸை நடிக்க வைக்க தியாகராஜன் திட்டமிட்டுள்ளாராம்.
ஒரு ரவுண்ட்
34 வயதானாலும் இளம்நடிகைகள் பார்த்து பொறாமைப்படும் வகையில் உள்ள நர்கிஸ் நினைத்தால் கோலிவுட்டில் ஒரு பெரிய்ய்ய ரவுண்ட் வரலாம்.
தமிழ்நாடு
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு நர்கிஸ் ஃபக்ரியை மட்டும் கைவிட்டுவிடுமா என்ன?. வட இந்தியாவில் இருந்து வந்த நடிகைகளை தமிழ்நாடு வாழவைத்தது, வைத்துக் கொண்டிருக்கிறது, வாழ வைக்கும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating