வேலை கிடைக்காத ஏக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை!!

Read Time:1 Minute, 56 Second

09dc2caf-ea29-4ea3-8107-45cc9b565f20_S_secvpfகோவை ரெயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் கோவை சுவாமி அய்யர் வீதியை சேர்ந்த அருள் (வயது 24) என்ற வாலிபர் அறை எடுத்து தங்கியிருந்தார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அருளை அழைத்து பார்த்தனர். நீண்ட நேரமாகியும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு விஷம் குடித்த நிலையில் அருள் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அருள் தங்கியிருந்த அறையிலிருந்து உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் முதலில் அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். கடந்த 2012–ஆம் ஆண்டு என்ஜினீயரிங் முடித்த எனக்கு எந்த வேலையும் சரியாக கிடைக்கவில்லை. இதன் காரணமாக வேலை பார்த்து உங்களை காப்பாற முடியவில்லை.

எனவே தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை. என் அஸ்தியை காவிரி ஆற்றில் கரைத்து விடுங்கள் என்று கூறியிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிக்கு சூடு போட்டு சித்ரவதை: சித்தி மீது மகளிர் போலீசில் புகார்!!
Next post வேட்டவலத்தில் மாணவியுடன் கல்லூரி தலைவர் மாயம்!!