உயிரைப் பறித்த ‘செல்பி”!!

Read Time:2 Minute, 43 Second

Oscar-Otero-Aguilarபேஸ்புக்கில் தன்னை தானே சுடுவது போல் ‘செல்பி” போட்டோ வெளியிட ஆசைப்பட்ட இளைஞரொருவர் போட்டோ எடுக்கும் போது தன்னைத்தானே தவறுதலாக சுட்டு உயிரிழந்துள்ளார்.

பலர் தங்களை விதவிதமாக போட்டோ பிடித்து, அவற்றை சமூக வலைதளங்களான பேஸ்புக் போன்ற இணைய பக்கங்களில் வெளியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் மெக்சிகோவை சேர்ந்த ஆஸ்கர் ஒடேரோ அகுலைர்(21) என்ற இளைஞர் ஒருவர் போட்டோ வெளியிட ஆசைப்பட்டு உயிரை மாய்த்துள்ளார்.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விதவிதமான போஸ்களுடன் போட்டோக்களை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

விலையுயர்ந்த கார்கள், மோட்டார் சைக்கிளில் போஸ் கொடுப்பது, அழகான பெண்களை கட்டியணைத்தபடி இருப்பது என பல போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார்.

அவருக்கு திடீரென ஒரு ஆசை ஏற்பட்டது. சினிமா நடிகர்களைப் போல் துப்பாக்கியை தலையில் வைத்தபடி போட்டோ எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.
உடனே கைத்துப்பாக்கியை எடுத்தார். அதில் தோட்டாக்கள் உள்ளதை பொருட்படுத்தவில்லை. தனது தலையில் துப்பாக்கியை வைத்தபடி, மற்றொரு கையால் செல்போனில் தன்னைத் தானே செல்பி போட்டோ எடுக்க முயன்றார். அப்போது செல்போனில் கமராவை கிளிக் செய்வதற்கு பதிலாக, துப்பாக்கியை கிளிக் செய்து விட்டார். இதில், அவரது தலையில் குண்டு பாய்ந்து உயிரை பறித்தது.

இது பற்றி, அவரது அயல்வீட்டுக்காரர் கருத்து தெரிவிக்கையில்,

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதுமே நான் பொலிசுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து விட்டேன்.
பொலிசார் வந்த போது ஆஸ்கர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். உயிர் இருந்தது. ஆனால், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே இறந்து விட்டார் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்கள் கைது!!
Next post செவ்வாயில் ஒட்சிசனை உருவாக்க தயாராகும் புதிய ரோவர் விண்கலம்!!