உயரதிகாரியின் துன்புறுத்தலால் பதவியை ராஜினாமா செய்த கடற்படை பெண் அதிகாரி!!

Read Time:1 Minute, 38 Second

f3f1600a-7ebe-4642-b60d-f3e690358ba5_S_secvpfஆந்திர மாநிலம் விசாகப்பட்டினதிலுள்ள கடற்படைக்கான பயிற்சிப் பள்ளியில் பயிற்சியின்போது உயரதிகாரி ஒருவர் தனக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பெண் அதிகாரி ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

வேலையை அப்பெண் அதிகாரி ராஜினாமா செய்ததால் பயிற்சிக்காக அவருக்கு செலவழிக்கப்பட்ட பல்வேறு வகையான தொகையினை திருப்பி செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் ராணுவ நீதிமன்றம் அப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த அதிகாரியை கண்டுபிடித்து அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. தளபதி பொறுப்பில் உள்ள அந்த அதிகாரி, அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில், ஐந்து குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ராணுவ நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் அத்தளபதிக்கு 18 மாத பணிமூப்பு குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் அதிகாரிக்கு வழங்கப்படும் 54(2)ன் கீழ் அவருக்கு இந்த தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹாலிவுட்டில் நடித்தபடி தமிழில் குத்தாட்டம் போட்ட இந்தி!!
Next post நடிகைக்கு இயக்குனர் கொடுத்த அதிர்ச்சி!!