ஜப்பானில் சிகரெட் விலை ஏற்றம்: புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது!!

Read Time:3 Minute, 15 Second

3bc9938a-1b74-42fd-ae20-fd1ec17dc6dd_S_secvpfஜப்பான் நாட்டில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அங்கு புகை பிடிப்போரின் எண்ணிக்கை 20 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அங்கு நிலவிவரும் சிகரெட் விலையேற்றமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.

கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சென்ற வருடத்தைவிட 1.2 சதவிகிதம் குறைவாக 19.7 என்ற சதவிகிதத்தை இந்த வருடத்திய கணக்கீடு தெரிவித்தது. இந்த விகிதமானது கடந்த 1965-ம் ஆண்டு இதற்கான கணக்கீடு தொடங்கப்பட்டதிலிருந்து காணப்படும் மிகவும் குறைவான அளவென்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜப்பானின் சிகரெட் வர்த்தகத்தில் ஏகபோக உரிமையாளரான ஜப்பான் டொபாக்கோ நிறுவனம் புதன்கிழமை அன்று வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி அங்குள்ள புகைப்பவர்களின் எண்ணிக்கை 20.6 மில்லியனாக உள்ளது.இதில் 30.3 சதவிகிதத்தினர் வயது வந்த ஆண்களாகவும் 9.8 சதவிகிதத்தினர் வயது வந்த பெண்களாகவும் இருக்கின்றனர்.

ஆனால் இந்த மொத்த கணக்கீட்டின் எண்ணிக்கையானது அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் அங்கு வெளியிட்டுள்ள புகை பிடிப்போரின் அளவான 18.1 சதவிகிதத்தை ஒத்திருப்பதால் ஜப்பான் அமெரிக்காவிற்கு இணையாகக் கணக்கிடப்படுகின்றது. கடந்த 17 வருடங்களுக்குப்பிறகு சிகரெட், மது மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான விலையை ஜப்பான் உயர்த்திய ஒரு மாதத்திற்குப்பின் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அங்கு அதிகரித்துவரும் வயதானவர்களின் எண்ணிக்கையும், பொது சுகாதார பிரச்சாரங்களும், பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிகளும்கூட இந்த சதவிகித குறைவிற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று டொபாக்கோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சென்ற 1966-ம் ஆண்டில் 83.7 சதவிகித ஆண்களுடனும்,18 சதவிகித பெண்களுடனும் புகைபிடிப்போரின் எண்ணிக்கை 49.4 சதவிகிதமாக உச்சத்தில் இருந்தது. அதன்பின்னர் படிப்படியாகக் குறைந்து 2004ஆம் ஆண்டில் 30 சதவிகிதத்திற்கும் குறைவாகவே காணப்பட்டது என்றும் இத்தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டு குளியலறையில் முதலை: அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்!!
Next post திருவரங்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!!