23 வயது சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!!
இந்தூரில் 23 வயது சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் ஒருவரை கற்பழித்ததுடன் ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய பொறியியல் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அப்பெண் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, குஜராத் மாநிலம் பவ்நகரை சேர்ந்த 25 வயதான ரிஷாப் கட்டோடியா சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானார்.
கடந்த ஜனவரி மாதத்தில் இந்தூருக்கு வந்த ரிஷாப் இயற்கையை ரசிக்கலாம் என்று கூறி என்னை அழைத்துச் சென்றார். அப்போது மயக்க மருந்து கலந்த காபியை எனக்கு அவர் கொடுத்தார். அதை பருகிய சிறிது நேரத்தில் நான் மயங்கிவிட்டேன். அந்த சமயத்தில் ரிஷாப் தனது செல்போனில் என்னை ஆபாசமாக படமெடுத்துக்கொண்டார். இரண்டு மாதங்களுக்கு பின் என்னை அழைத்த அவர், எனது ஆபாச வீடியோ காட்சிகளை வலைத்தளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டினார். இவ்வாறு மிரட்டி என்னை வதோதரா நகருக்கு வரவழைத்த அவர் தொடர்ந்து மூன்று நாட்கள் என்னை கற்பழித்தார்.
அதன்பின் தனது ஆபாச காட்சிகளில் சிலவற்றை செல்போனில் இருந்து அவன் நீக்கிய பின், நான் இந்தூருக்கு வந்துவிட்டேன். சில நாட்கள் கழித்து எனது ஆபாசப் புகைப்படங்களை எனக்கு அனுப்பிய அவன், அவனை திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டினான். அவனை நான் திருமணம் செய்ய மறுத்தபோது, என்னை கொன்றுவிடுவதாக அவன் மிரட்டினான். அதனால் மிரண்டு போன நான் அவன் அனுப்பிய புகைப்படங்களை எனது பெற்றோரிடம் கொடுத்தேன். அவர்கள் தெரிவித்த ஆலோசனையின் படி தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ரிஷாப்பை பிடிக்க வியூகம் வகுத்தனர். போலீசாரின் திட்டப்படி, ரிஷாப்பை இந்தூருக்கு வருமாறு அப்பெண் அழைப்பு விடுத்தார். அதனை நம்பிய மிரட்டல் பேர்வழி ரிஷாப்பும் இந்தூருக்கு வந்தபோது பொறியில் மாட்டிய எலி போல போலீசார் விரித்த வலையில் சிக்கி கைதானான். பின்னர் அவன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating