தகாத உறவை தொடரமுடியவில்லை: மகளை கொன்ற தந்தை!!
கோவை சரவணம்பட்டி அருகிலுள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 42). இவரது மனைவி ஜெயமேரி (39). இவர்களுக்கு அடைக்கலமேரி (24), அருள் இருதயா (20) என்ற மகள்களும், அற்புதராஜ் (18) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 1 வருடத்துக்கு முன்பு அடைக்கல மேரிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பு இருந்தே அடைக்கல மேரிக்கும், அவரது தந்தை அந்தோணி ராஜூக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் திருமணமான 3 மாதத்தில் அடைக்கலமேரியின் தகாத உறவு குறித்து அவரது கணவருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அடைக்கல மேரி பீளமேட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார்.
அங்கும் அந்தோணி ராஜ் மகள் அடைக்கல மேரியுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டார். இதையறிந்த ஜெயமேரி கணவரை பிரிந்து சென்றார். இந்த நிலையில் அடைக்கல மேரி பீளமேட்டில் உள்ள தனியார் மாலுக்கு வேலைக்கு சென்றார். அங்கு உடன் பணியாற்றிய ராஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையறிந்த அடைக்கல ராஜ் மகளை கண்டித்தார். இதைத் தொடர்ந்து ராஜாவுடன் அடைக்கல மேரி திருச்சிக்கு சென்றார். அங்கு ராஜாவை அவர் 2–வது திருமணம் செய்து கொண்டார். கடந்த 6 மாத காலமாக ராஜாவுடன் திருச்சியில் அடைக்கல மேரி குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அந்தோணி ராஜ் மகளை அடிக்கடி தொடர்பு கொண்டு தன்னிடம் வந்து சேரும்படி கூறினார். ஆனால் அதற்கு அடைக்கல மேரி மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் ஜெயமேரியின் தாயாருக்கு திடீரென்று உடல்நலம் குன்றியது.
இது குறித்த தகவல் அடைக்கல மேரிக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் திருச்சியில் இருந்து கோவைக்கு நேற்று அடைக்கல மேரி வந்தார்.
அவர் நேராக தாய் வீட்டில் உள்ள பாட்டியை பார்க்க சென்றார். அடைக்கல மேரி வந்த தகவலறிந்ததும் மனைவியின் வீட்டுக்கு அந்தோணிராஜ் சென்றார். அங்கு இருந்த மகளை தன்னுடன் அழைத்துக் கொண்டு சேரன்மா நகருக்கு சென்றார். அங்கு தனது வீட்டில் அடைக்கல மேரியுடன் உல்லாசம் அனுபவித்தார்.
பின்னர் அடைக்கல மேரியை ராஜாவுடன் திருச்சிக்கு சென்று வாழக் கூடாது. தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்றார். இதற்கு அடைக்கல மேரி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த அந்தோணிராஜ் படுக்கையில் இருந்த அடைக்கல மேரியை தலையணையால் அமுக்கி மூச்சை நிறுத்தி கொலை செய்தார்.
அடைக்கல மேரி இறந்ததை உறுதி செய்த அவர் பொலிசிடம் இருந்து தப்பிக்க புதிய திட்டம் ஒன்றை தீட்டினார். அதன்படி வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து அடைக்கல மேரியின் வாயில் ஊற்றி அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது போல் ஏற்பாடு செய்தார்.
பின்னர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் அடைக்கல மேரியின் உடலை எடுத்துக் கொண்டு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அடைக்கல மேரி விஷம் குடித்து தற்கொலைக்கு செய்து கொண்டதாக தெரிவித்தார். அதை அவரது மனைவி ஜெயமேரி மற்றும் அவரது உறவினர்கள் நம்பவில்லை. அந்தோணிராஜிடம் தொடர்ந்து சண்டையிட்டனர்.
இதையடுத்து நடந்த தவறை ஒப்புக்கொண்டார். பின்னர் சரவணம்பட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிசாரிடம் சரணடைந்தார். அவர்களிடம் மகளை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து சரவணம்பட்டி பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அடைக்கல மேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்தோணி ராஜிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating