ஜாதி பெயரை வைத்து அழைக்காதீர்கள்: பார்வதி!!
தமிழில் ‘பூ’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2006-ல் மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ந்து 4 படங்கள் மலையாளத்தில் நடித்தாலும் தமிழில் வெளியான ‘பூ’ படம் இவருக்கு நடிகைக்கான அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படத்திற்காக இவர் பல விருதுகளை வாங்கினார்.
பின்னர் தமிழில் ‘சென்னையில் ஒரு நாள்’, தனுசுடன் இணைந்து ‘மரியான்’ படத்திலும் நடித்தார். குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் பார்வதி, தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் பற்றி பார்வதி கூறும்போது, இப்படம் வெற்றியடைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.
மேலும், “என் பெயரை பார்வதி மேனன் என்று அழைக்கிறார்கள். அப்படி என்னை அழைக்காதீர்கள். என் பெயர் பார்வதி தான். பாஸ்போர்ட்டில் பார்வதி என்றுதான் இருக்கிறது. பார்வதி என்று என்னை கூப்பிடுவதையே நான் விரும்புகிறேன். ஒரு கன்னட படத்தில் என் பெயரை பார்வதி மேனன் என்று போட்டார்கள். அதிலிருந்து அனைவரும் என்னை அப்படியே கூப்பிடுகிறார்கள். ஆதலால் என் பெயரில் உள்ள மேனனை தூக்கிவிட்டு பார்வதி என்றே அழையுங்கள்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating