அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை வழங்கியதால் சர்ச்சையில் சிக்கிய சீன கோடீஸ்வர தம்பதியர்!!

Read Time:3 Minute, 45 Second

0e706731-c877-4f34-b3c5-89ff88e40d5e_S_secvpfசீனாவில் பிரபலமாக விளங்கிவரும் சோஹோ சைனா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்களான பான் ஷியி மற்றும் சங் சின் தம்பதியர் அந்நாட்டின் பெரும் கோடீஸ்வரர்கள் ஆவர். அதுமட்டுமின்றி இணையதளத் தகவல் பக்கத்தில் 17 மில்லியன் மக்கள் பின்பற்றும் பிக் வி பிளாகர் என்றும் பான் ஷியி அறியப்படுகின்றார்.

இவர்கள் உலகெங்கும் உள்ள முதல்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் பொருளாதார வசதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு 100 மில்லியன் டாலர் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளனர்.

இதன் முதல்கட்டமாக ஐவி லீக் நிறுவனங்களில் உள்ள உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு 15 மில்லியன் டாலர் வழங்கினர்.

சர்வதேச கல்வி நிறுவனக் கணக்கீட்டின்படி அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் கால் பகுதியினரை அனுப்பும் ஒற்றை நாடாக சீனா திகழ்கின்றது. இவர்களில் பெரும்பான்மையினருக்கு அவரவர் குடும்பங்களே வேண்டிய நிதியுதவிகளை அளித்துவருகின்றனர். ஆனால் இனி தங்களது சோஹா கல்வி உதவித்தொகை பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாணவர்களின் வெளிநாட்டு படிப்பிற்கு உதவி செய்யும் என்று பான் ஷியி குறிப்பிட்டுள்ளார்.

இந்த உதவி குறித்து அவரது இணையதளப் பக்கங்களில் அதிக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீனாவில் பயிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை பெருமளவில் உதவும் என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். சொந்த நாட்டின் மக்களை அவர்கள் நிந்திக்கின்றனர் என்ற ஒரு கருத்தும் எழுந்துள்ளது. உள்நாட்டு மக்களிடம் பணத்தை சம்பாதித்து அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு உதவுவதை வறுமை என்று வரையறை செய்கின்றனர் என்று ஒருவர் குறிப்பிட்டிருக்க, சீனாவின் எழுச்சியும், உயர் கல்வி வரலாறும் தவிர்க்கமுடியாதது என்ற ஒரு பாராட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பான் ஷியி தம்பதியினர் தங்களுடைய மகனுக்கு ஹார்வர்டில் அனுமதி கிடைப்பதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்ற ஒரு கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யாவிட்டால் நல்ல கல்வி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று பான் தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.

சீனாவில் காற்றின் மாசுத்தன்மை அதிகரித்து வருவதைப் பற்றி அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னரே தெரிவித்ததன்மூலம் இவர் ஏற்கனவே கடும் விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுனாமி புரளியால் மாரடைப்பில் பெண் பலி!!
Next post மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட சூடான் பெண் இத்தாலி பயணம்!!