ஸ்ருதியின் கையைக் கடித்தது யார்?

Read Time:2 Minute, 12 Second

Untitled-122சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனின் இடது கையில் இருந்த காயம் காரணமாக பலவித யூகங்களை எழுப்பி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

சமீபத்தில் சென்னையில் நடந்த பிலிம்பேர் விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டு நடனமும் ஆடினார். அப்போது அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தவர்கள் அவரது இடது கையில் காயம் இருந்ததை கவனித்து, வளைத்து வளைத்து அவரது கை தெரியும்படியான புகைப்படங்களை அதிகமாக எடுத்துள்ளனர்.

ஸ்ருதிஹாசனின் காயம் யாரோ ஒருவர் கடித்தது போல் உள்ளதாகவும், ஆண் நண்பர் ஒருவரால் ஏற்பட்ட காதல் பிரச்சினையால் ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
ஆனால் ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து, டான்ஸ் பிராக்டீஸ் செய்யும்போது கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம்தான் இது என்றும், இதுகுறித்து யாரும் கற்பனையான செய்தி பரப்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் சமூக இணையதளத்தில் ஒருவர் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஒருவரால்தான் இந்த காயம் ஸ்ருதிஹாசனுக்கு ஏற்பட்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.

அதே இணையதளத்தில் இன்னும் ஒருசிலர் பூஜை படப்பிடிப்பின்போது அந்த படத்தின் ஹீரோவால் ஏற்பட்ட காயம் என்று கூறியுள்ளனர். ஸ்ருதிஹாசனின் சிறுகாயம் ஊடகங்களில் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது என்பதுதான் உண்மை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புல்மோட்டையில் இளம் பெண் மீது அசிட் வீச்சு!!
Next post உயிருள்ளவரை இந்தியனே! சானியா உருக்கம்!!