ஏ.டி.எம். ரசீதால் புற்றுநோய்?: ஆய்வு நடத்த ராஜஸ்தான் முடிவு!!

Read Time:2 Minute, 33 Second

0f22eca8-92ee-4659-b045-539a7695e10d_S_secvpfஅவுரங்காபாத்தை சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் மரத்தாவாடா பல்கலைக் கழகத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ‘ஏ.டி.எம். ரசீது தாளால் புற்று நோய் அபாயம் உள்ளது. ஏ.டி.எம். ரசீது தாள்களில் பிஸ்பினால் ரசாயனம் கலந்துள்ளது. இவை மனித தோலில் ஊடுருவி உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்’’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த பிரச்சினை ராஜஸ்தான் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. அந்த மாநில மந்திரி பதில் அளிக்கையில், ‘ஏ.டி.எம். தாள்களால் புற்று நோய் ஏற்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதுபற்றி ஆய்வு நடத்த உயர் நிலைக் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

ஏ.டி.எம். ரசீது தாளால் புற்றுநோய் ஏற்படுமா என்று வங்கி உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் மறுத்தனர். இது தொடர்பாக போரூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சீனியர் மானேஜர் கிருஷ்ணன் கூறியதாவது:–

தற்போது பிஸ்பினால் ரசாயனம் பூசப்பட்ட தாள்கள் எல்லா இடங்களிலும் வந்து விட்டது. ஏ.டி.எம். மட்டுமின்றி கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெட்ரோல் பங்க், பஸ் கண்டக்டர், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் என அனைத்து இடங்களிலும் இந்த தாள்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக காலத்தின் கட்டாயம் கருதி அவை பயன்படுத்தப்படுகின்றன. போரூரில் உள்ள எங்கள் வங்கியுடன் இணைந்து ஏ.டி.எம். மையமும் உள்ளது. ஆனால் ஏ.டி.எம். தாள்களால் புற்றுநோய் ஏற்பட்டது என்று எந்த புகார்களும் எங்ளுக்கு வந்ததில்லை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று. எனவே ஏ.டி.எம். தாள்களில் புற்று நோய் பரவாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரூர் அருகே சமையல் செய்த போது தீயில் கருகி பெண் பலி!!
Next post அசாமில் 9 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளி தலைமறைவு!!