வேதாரண்யம் அருகே காதல் திருமண ஜோடி உண்ணாவிரதம்!!

Read Time:2 Minute, 3 Second

8fdcb7e2-c8fb-4774-8dee-39fc34c81584_S_secvpfவேதாரண்யத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக வீட்டிற்கு செல்லும் பாதையில் கொட்டகை கட்டி வைத்துள்ளதைக் கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தாலுக்கா அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(24).

விவசாய கூலித் தொழிலாளி. இவர் மணக்காட்டைச் சேர்ந்த வேறொரு ஜாதியைச் சேர்ந்த சூர்யா(21) என்ற பெண்னை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

வேறு ஜாதியில் திருமணம் செய்துக் கொண்டதால் பத்மநாதன் வீட்டிற்கு செல்லும் பாதையை அன்பழகன் என்பவர் அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசில் புகார் செய்தும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

எனவே இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து பாதையை திறக்ககோரி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். உண்ணாவிரதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அங்கு பத்மநாதன், அவரது மனைவி சூர்யா, பத்மநாதனின் தந்தை மகாலிங்கம், தாய் ஜெயலெட்சுமி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வலிப்பு நோய் மாத்திரையை அதிகளவில் சாப்பிட்ட மாணவி பலி!!
Next post மருமகனுடன் சேர்ந்து கணவரை எரித்து கொன்ற மனைவி!!