மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு!!

Read Time:2 Minute, 10 Second

79da967e-7012-43e0-ba04-d8d0f6482363_S_secvpfமதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அபிராம சுந்தரி என்பவர் மன வளர்ச்சி குன்றிய தனது மகளுடன் முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:–

எனக்கும், திருச்செந்தில் குமார் என்பவருக்கும் 1998–ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடன் தொல்லை தாங்க முடியாமல் 2002–ம் ஆண்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

என்னுடைய முதல் மகள் நிலா (வயது 15) மதுரையில் உள்ள அரசு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறாள். இரண்டாவது மகள் ரம்யா (14). இவள் மனவளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்.

இவளால் நடக்க முடியாது. பேச முடியாது. சாப்பிட முடியாது. அவளுக்கு சிறுநீர், மலம் கழிக்க வேண்டும் என்றால் கூட நான்தான் அழைத்து செல்ல வேண்டும். தண்ணீர் உட்பட உணவுகள் அனைத்தையும் நான்தான் அவளுக்கு ஊட்டுகிறேன்.

என் மகளை குணப்படுத்த முடியாது என டாக்டர்கள் சொல்லி விட்டனர். அவளை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் பி.ஏ. (பாதியில் நிறுத்தி விட்டேன்) படித்து இருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். என்னுடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எனக்கு அரசு வேலை வழங்கினால் என் மகளை எப்படியாவது பார்த்துக் கொள்வேன். இல்லை என்றால் என்னுடைய மகள் ரம்யாவை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் 10 வயது சிறுமி கற்பழிப்பு: கருணை கொலைக்கு மிரட்டல்!!
Next post சென்னையில் பங்களா வீட்டில் விபசாரம்: 6 அழகிகள் மீட்பு!!