தேனிலவு தம்பதிகளை வரவேற்க தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா!!

Read Time:2 Minute, 47 Second

9ea85374-3454-4125-8f68-c05526c1280b_S_secvpfஊட்டி தாவரவியல் பூங்காவை காண தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆண்டுதோறும் சுமார் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக கணக்கிடப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2–வது சீசனும் நிலவும். இந்த 2–வது சீசன் மாதங்களின் போது வட மாநிலங்களில் அதிகளவு திருமணம் நடைபெறும்.

இதில் பெரும்பாலானவர்கள் தங்களது தேனிலவுக்காக ஊட்டிக்கு வருகின்றனர். எனவே இந்த சீசனில் ஊட்டிக்கு வரும் புதுமண தம்பதிகளை மகிழ்விக்கும் வகையில் சுமார் 55 ரகங்களை சேர்ந்த 1½ லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மலர்செடிகளில் வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் மலர்கள் பூக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பூங்கா அதி காரிகள் கூறியதாவது:–

அரசு தாவரவியல் பூங்காவில் 2–வது சீசனிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இதில் பிரெஞ்ச் மேரி கோல்டு, இன்ட்கா மேரி கோல்டு, யூரோ ஆரஞ்ச், ஸ்கார்ப்பியன் ஆரஞ்ச், பெட்டுனியா, லூபின், அஜிரேட்டம், பப்பி, சூரிய காந்தி, சப்னேரியா, டேலியா உள்பட 55 ரகங்களை சேர்ந்த 1½ லட்சம் மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விடும்.

இந்த செடிகளில் இருந்து வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் மலர்கள் மலர தொடங்கும். இது தவிர 7 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப் பட்டு உள்ளன. இந்த பூந் தொட்டிகளில் மலர்கள் மலர்ந்ததும் சுற்றுலா பயணி கள் கண்டு ரசிப்பதற்காக பூங்கா மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேறு பெண்ணுடன் தொடர்பு: கணவரை கண்டித்த பெண்ணுக்கு அடி–உதை!!
Next post சென்னை ரெயிலில் பெண் துறவி மாயம் கதி என்ன?: போலீஸ் விசாரணை!!