’காதல்’ தண்டபானி மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!!
காதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தண்டபாணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 2004–ம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக ஓடிய ‘காதல்’ படத்தில் வில்லனாக நடித்தவர் தண்டபாணி. அந்தப்படத்தில் கதாநாயகி நடிகை சந்தியாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார். கொடூர முகத்துடன் செயற்கைத்தனம் இல்லாத அவரது வில்லன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
சித்திரம் பேசுதடி படத்திலும் வில்லன் கேரக்டரில் சிறப்பாக நடித்து இருந்தார். அதில் வரும் ‘‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்’’ பாடலில் கானா உலகநாதனுடன் இயல்பாக நடித்து இருந்தார். தொடர்ந்து இங்கிலீஷ்காரன், உனக்கும் எனக்கும், வட்டாரம், முனி, மருதமலை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது, நடிகர் சரத்குமார் நடிக்கும் ‘சண்டமாருதம்’ படத்தில் நடித்து வந்தார். நேற்று சென்னையில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு இரவு வடபழனி மன்னார் தெருவில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.
இன்று காலை 6 மணிக்கு திடீர் என்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நடிகர் தண்டபாணி மாரடைப்பு காரணமாக இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததும் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் – நடிகைகள் விரைந்து சென்று தண்டபாணி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் தண்டபாணியின் சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும். அங்கு இறுதிச் சடங்கு நடக்கிறது. இதற்காக அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் கொண்டு செல்லப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் உடன் செல்கிறார்கள்.
மரணம் அடைந்த நடிகர் தண்டபாணிக்கு வயது 71. மனைவி இல்லை. லெனின், விமலாகித்தன், பழனிகுமார் என்ற மகன்களும், ராஜேஷ்வரி என்ற மகளும் உள்ளனர். சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு உள்பட 50 படங்களில் நடித்தார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு திண்டுக்கல்லில் கடை வைத்து பொறி வியாபாரம் செய்து வந்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating