இணையத்தில் சிறார் துஷ்பிரயோகம் செய்வோர் கைது!!

Read Time:2 Minute, 13 Second

1706314343child_protection3இலங்கையில் சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நோக்குடன் இணையதளங்கள் ஊடாக அணுகும் நபர்களை கண்காணித்து கைதுசெய்யும் (cyberwatch unit) கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை சிறார் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திவருகின்றது.

இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இப்படியான சுமார் 2500 பேரின் இணையதள செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துவருவதாக இலங்கையின் சிறார் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திஸாநாயக்க பிபிசியிடம் கூறினார்.

´பேஸ்புக் போன்ற இணையதளங்கள் ஊடாக சிறார்களை அணுகி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயல்வோர் தொடர்பில் ஆராய்ந்துபார்த்து இந்த சைபர்வா்ட்ச் யுனிட் மூலம் கைது செய்துவருகின்றோம்´ என்றார் அனோமா திஸாநாயக்க.

´இன்னும் 30 பேருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றோம். இன்னும் 2500 பேர் வரையில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள். சமூகத்தில் ஒவ்வொரு அஸ்தஸ்துகளில் இருப்பவர்கள். சிறார்களை துஷ்பிரயோகம் செய்வதற்காக அவர்களை தூண்டுவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர்´ என்றும் கூறினார் திஸாநாயக்க.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் பல்கலைக்கழக பேராசிரியர், விளையாட்டு பயிற்சியாளர், நில அளவைவியல் திணைக்கள அதிகாரி மற்றும் கணினி நிறுவனத்தைச் சேர்ந்தவர் என சமூகத்தின் பலதரப்பட்ட அந்தஸ்துகளில் உள்ளவர்களும் இருப்பதாக சிறார் பாதுகாப்பு அதிகாரசபை கூறுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விவாகரத்து வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மனைவி ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு!!
Next post மட்டக்களப்பில் 550 குளங்களை காணவில்லை!!