தொலைவிலிருக்கும் காதலர்கள் ஒருவருக்கொருவர் கரங்களைப் பற்றிக்கொள்ள உதவும் உபகரணம்!!

Read Time:1 Minute, 45 Second

article-2691405-1FA1AA5A00000578-149_634x358ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு ‘ஸ்கைப்’ போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் காதலர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளது.

இந்நிலையில் நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘பிரெப்பிள்ஸ்’ என அழைக்கப்படும் தொலை தூரத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தொடுகை உணர்வைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் தொழில்நுட்ப உபகரணங்களை உருவாக்கியுள்ளனர்.

கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம் செயற்படும் இந்த உபகரணம் ஒருவர் தனது அன்புக்குரியவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரது கரத்தைப் பற்றி அன்பை வெளிப்படுத்துவதற்கு வழிவகை செய்கிறது.

தூர இடங்களில் இருக்கும் காதலர்கள் தம்மிடமுள்ள ‘மிரெப்பிள்ஸ்’ உபகரணத்தைப் பயன்படுத்தி கரத்தைப் பற்றும் உணர்வை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ள முடியும்.

இந்த உபகரணத்தை ஸ்கைப் மற்றும் கூகுள் ஹேங் அவுட் சேவைகளுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும்.

மேற்படி ஒரு சோடி உபகரணங்களின் ஆகக்குறைந்த விலை 89 அமெரிக்க டொலராகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுத்தை தாக்கி பெண் பலி: சிறுவன் வைத்தியசாலையில்!!
Next post வளைத்தால், திருகினால், கத்தியால் குத்தினால் பாதிப்படையாத கையடக்க தொலைபேசி திரை!!