சீனாவில் மனைவியுடன் ஏற்பட்ட விவாதத்தில், பேப்பர் கிளிப்புகளை விழுங்கிய வாலிபர்..

Read Time:2 Minute, 8 Second

questioசீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் குவாங்சூ நகரைச் சேர்ந்த 26 வயது வாலிபன் ஒருவன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நன்கு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது மனைவியுடன் ஏற்பட்ட விவாதத்தில் என்ன செய்கின்றோம் என்று தெரியாமலேயே பேப்பர்களை சேர்த்து வைக்க உதவும் ஸ்டீல் கிளிப்புகளை எடுத்து விழுங்கிவிட்டான். கிட்டத்தட்ட 10 கிளிப்புகளை அவன் இதுபோல் விழுங்கியுள்ளான்.

மறுநாள் சில கிளிப்புகள் வெளிவந்து விட மற்றவை அவன் வயிற்றிலேயே தங்கிவிட்டன. இதுநாள் வரை எந்த பிரச்சினையும் தராத அந்த கிளிப்புகள் இப்போது அவனுக்கு வலி , காய்ச்சல், ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் அடிவயிற்றில் ஏற்பட்ட வலியினால் அவனால் நேராக நிமிர்ந்தும் நடக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அங்குள்ள தெற்கு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சுஜியாங் மருத்துவமனையில் அவன் அனுமதிக்கப்பட்டான்.

அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எட்டு செ.மீ நீளமுடைய எட்டு கிளிப்புகளை அவனுடைய வயிற்றிலிருந்து எடுத்துள்ளதாக தினசரிப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. உலகெங்கும் மனைவிமார்கள் ஒரே மாதிரிதான் இருப்பார்களோ என்று இதனைப் படிக்கும் நம்மூர்க் குடிமகன் கூட முணுமுணுக்கக்கூடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்பி நிர்வாணப் புகைப்படத்தை, காதலனுக்கு அனுப்புவதற்கு பதிலாக தந்தைக்கு அனுப்பிய மகள்!
Next post விஜய்யின் நன்றியை மறந்த த்ரிஷா!