காதலித்து ஏமாற்றிய காதலியை கழுத்து நெரித்து கொன்ற காதலன்!!
கோட்டூர்புரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயகுமாரின் மகள் நித்யா (23).
அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தில் உள்ள கேண்டீனில் நித்யா வேலை பார்த்து வந்தார். இவர் இதே கேண்டீனில் டீ மாஸ்டராக இருந்த ஏழுமலை (28) என்ற வாலிபரை காதலித்தார். 3 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இருவரும் பெசன்ட் நகர் கடற்கரையில் சந்தித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் நித்யாவை கொலை செய்து விட்டு ஏழுமலை தப்பி ஓடி விட்டார்.
பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை தேடி வந்தனர். திண்டிவனம் அருகே உள்ள முன்னூர் கிராமத்தைச் சேர்ந்த அவரை பொலிஸார் நேற்று நள்ளிரவு பொறி வைத்து பிடித்தனர். கைதான ஏழுமலை பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–
நான் நித்யாவை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவளும் என்னை காதலித்தாள். 3 வருடங்களாக பழகினோம். அவளது அக்காவுக்கு திருமணம் நடந்த பிறகுதான் நித்யாவுக்கு திருமணம் நடக்கும் என்று அவளது பெற்றோர் கூறி விட்டனர்.
சமீப காலமாக நித்யா என்னை விட்டு விலக முயற்சி செய்தாள். சில மாதங்களாக அவளது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. மற்ற வாலிபர்களுடனும் சிரித்து பேசினாள். இதனால் அவள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எங்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நான் நித்யாவின் பெற்றோரை சந்தித்து எங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டேன். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். அவளை மறந்து விடும்படி கண்டிப்புடன் கூறினார்கள். ஆனால் நான் நித்யாவை மணப்பதில் உறுதியாக இருந்தேன். என்றாலும் நித்யா முன்பு போல் பழகவில்லை. காதல் முறிந்து விட்டதாக கூறினாள்.
நித்யாவை மீண்டும் சந்தித்து பேச விரும்பினேன். எனக்கு அவள் கிடைக்கா விட்டால் கொன்று விடவும் தயார் ஆனேன். நேற்று முன்தினம் என்னை சந்திக்க வேண்டும் என்று நித்யாவை அழைத்தேன். பெசன்ட் நகர் கடற்கரையில் வழக்கமாக சந்திக்கும் இடத்துக்கு வரும் படி தெரிவித்தேன்.
என்னை சந்திக்க வந்த நித்யா முன்பு போல அன்புடன் பேசவில்லை. நான் அவளுக்கு கொடுத்திருந்த ‘சிம்கார்டை’ என்னிடம் திருப்பித்தர முயற்சி செய்தாள். அவளை மறந்து விடும்படியும் கூறினாள்.
நித்யாவின் பேச்சு எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனக்கு கிடைக்காத உன்னை யாருக்கும் கிடைக்கவிட மாட்டேன் என்று கூறினேன். அவளும் பதில் சொன்னாள். இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
நேரம் ஆக ஆக தகராறு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் நித்யா தலையை எனது மடியில் அமுக்கி அவளது துப்பட்டாவால் கழுத்தை நெரித்தேன். அவள் திமிறினாள். உடனே கீழே தள்ளி கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தேன்.
இந்த சம்பவம் நடந்த போது இரவு 8 மணி இருக்கும். நாங்கள் காதலர்கள் என்பதால் நான் அவள் கழுத்தை இறுக்கியதை யாரும் கண்டு கொள்ளவில்லை. காதலர்கள் விளையாடுவதாக நினைத்துக் கொண்டனர். நித்யா பிணமாக கிடந்ததை பார்த்ததும் எனக்கு பயம் ஏற்பட்டது. அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். பின்னர் என்னை பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வாறு ஏழுமலை கூறியுள்ளார்.
Average Rating