சிறுவர் கடத்தல் தொடர்பாக யுனிசெப்பின் அறிக்கையும்- ரிஎம்விபியின் பதிலும்-
கருணா அணியினர் சிறுவர்களை கடத்திச் சென்று தங்களுடன் கட்டாயமாக இணைத்துக் கொள்வதை தடுதது நிறுத்த வேண்டுமென்று யுனிசெப் அமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் இது தொடர்;பில் 30ற்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதத்திலிருந்து 18 வயதிற்குக் குறைவானோர் கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. எனவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இக்கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் சிறுவர்களுக்கு உரிய சட்ட பாதுபாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.கடத்தப்பட்ட சிறுவர்களின்; பெற்றோர்களுடன் தொடர்பு கொண்டு உரிய விபரங்களை சேகரித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிசெப் அமைப்பு விடுத்த அறிக்கை குறித்து கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான பாரதி எனும் இனியபாரதி அதிரடிக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் “நாம் சிறார்களை படையில் சேர்ப்பது என்பது பொய்யான தகவல் வன்னிப்புலிகள் தான் வயது போனோர்களையும் பாடசாலை செல்லும் மாணவர்களையும் வலுக்கட்டாயமாக கடத்திக்கொண்டு கட்டாய பயிற்சி கொடுக்கிறார்களே தவிர நாங்கள் அல்ல.
நாங்கள் இதுவரைக்கும் இப்படிப்பட்ட கேவலமான சிந்தனையுடன் எமது மக்களுக்கு வேலை செய்யவில்லை. அதும்டடுமல்ல சிறுவர்களை படையில் சேர்த்து அவர்களது எதிர்கால இலட்சியங்கலையும் அவர்களது கல்வியையும் வீனாக்க நாங்கள் ஒரு போதும் நினைத்ததில்லை இனியும் நினைக்கப் போவதில்லை.
தற்போது இலங்கையின் சூழல் அதிலும் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை உலகறிந்த விடையம். எமது மக்;கள் தற்போது நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.இப்படிப்பட்ட சூழலை அடியோடு ஒழித்து எமது மக்களையும் எமது நாட்டில் வாழும் சிறார்களையும் நல்வழியில் நடாத்திச் சென்று அவர்களது எதிhகாலத்தை அவர்களே திட்டம் இட்டு செய்யும்மலவுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களுக்கென்றொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க எமது தலைமை விரும்புகிறதே தவிர படையில் சேர்த்து அவர்களை மீன்டும் ஒரு நிம்மதியற்ற வாழ்க்கைக்கு கொண்டு செல்ல அல்ல. நாம் சிறுவர்களை படையில் சேர்க்கின்றோம் என்பது பொய்யான தகவல் என்பதை உலகறிய வேண்டும். இப்படிப்பட்ட பொய்பிரச்சாரங்களை மக்கள் நம்பவேண்டாம்.
இப்படிப்பட்ட பொய்யான தகவல்களை நம்புபவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் எங்களது மட்டக்களப்பு அரசியல் செயலகத்திற்கு சென்று அங்குள்ள அரசியல் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி உண்மை நிலைமைகளை கண்டறியுங்கள். மற்றவர்கள் கூறும் பொய்யான தகவல்கலை கேட்டு எங்கள் மீது பழிபோடாதீர்கள்.
நாங்கள் சிறுவர்களை படையில் சேர்க்கின்றோம் என்ற பொய்யான தகவலை Unisef நிறுவனம்கூட கூறியிருக்கின்றது . அவர்களைக் கூட நாங்கள் சந்தித்து உன்மை நிலையை விளக்கக் கூட தயாராக இருக்கின்றோம்” என்று இனியபாரதி தெரிவித்துள்ளார்.
Thanks….WWW.ATHIRADY.COM