தனுஷ்கோடி-இலங்கை இடையே 5-வது மணல் மேட்டில் இந்தியா பெயர் பலகை!!

Read Time:4 Minute, 13 Second

35ee1eb5-903a-4072-99e0-30d5ae16f500_S_secvpfதனுஷ்கோடி-இலங்கை இடையே 5–வது மணல் மேட்டுப் பகுதியில் இந்திய கடல் எல்லையை குறிக்கும் விதமாக ‘இந்தியா‘ என்று எழுதப்பட்ட புதிய தகவல் பலகை வைக்கப்பட்டது.

ராமேசுவரம் தீவின் ஒரு பகுதியான தனுஷ்கோடிக்கும்-இலங்கைக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் (அதாவது மணல்மேட்டுப்பகுதி) உள்ளன.

இதில் நமது நாட்டின் எல்லைப் பகுதி தனுஷ்கோடியில் உள்ள 5–வது மணல் தீடையுடன் முடிவடைந்து விடுகிறது. இந்த மணல் தீடைகள் பகல் முழுவதும் கடல் நீர் வற்றிய நிலையிலும், இரவு நேரங்களில் கடல் நீரில் மூழ்கியும் காணப்படுவது வழக்கம்.

நமது நாட்டின் எல்லைப் பகுதியை குறிக்கும் விதமாக தனுஷ்கோடி 5–வது மணல் தீடையில் இருந்த எல்லை தகவல் பலகை கடல் கொந்தளிப்பாலும், சூறைக்காற்றாலும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அடித்துச் செல்லப்பட்டது. அது முதல் எல்லை தகவல் பலகையே இல்லாமல் 5–வது மணல் தீடை காட்சியளித்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இலங்கை கடற்படையினர் பல முறை நமது இந்திய கடல் எல்லை பகுதிக்குள்ளே அத்து மீறி நுழைந்து ராமேசுவரம், தனுஷ்கோடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 வருடத்திற்கு முன்பு அப்போதைய மாவட்ட கலெக்டராக இருந்த ஹரிகரன் உத்தரவுப்படி இந்திய கடற்படையினருடன் வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை அதிகாரிகள், மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார் ரோந்து படகில் சென்று தனுஷ்கோடி 5–வது மணல் தீடையில் இறங்கி புதிய எல்லைப் பலகைகள் வைப்பதற்கு இடங்களையும் ஆய்வு செய்து தேர்வு செய்தனர். அதன் பிறகும் அந்த பணி நிறைவேற்றப்படாமலேயே இருந்து வந்தது.

இந்தநிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக உள்ள நந்தகுமார் உத்தரவின் படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.3 லட்சம் நிதியில் புதிதாக எல்லை தகவல் பலகை பொதுப்பணித் துறையினர் மூலம் உடனடியாக தயாரிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு மண்டபத்தில் இருந்து இந்திய கடலோர காவல் படையினரும், பொதுப்பணித் துறையினரும், புதிய எல்லை தகவல் பலகைகளை தனுஷ்கோடி 5–வது மணல் தீடைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இந்திய கடல் எல்லையை குறிக்கும் விதமாக தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் ‘இந்தியா’ என்று எழுதப்பட்ட காங்கிரீட் கற்களால் செய்யப்பட்ட புதிய எல்லைப் பலகையை தனுஷ்கோடி 5–வது மணல் தீடையில் நிறுவினார்கள்.

இந்திய எல்லையை குறிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள 5–வது மணல் தீடை கடல் பகுதியை தாண்டி ராமேசுவரம் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லக் கூடாது என்றும், தனுஷ்கோடி 5–வது மணல் தீடை பகுதியில் சந்தேகப்படும்படியான மர்மப்படகுகள் எதுவும் ஊடுருவினால் மீனவர்கள் உடனடியாக இந்திய கடலோர காவல் படைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கடலோர காவல் படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாமக்கல் அருகே கழுதை பால் சங்கு ரூ.30-க்கு விற்பனை!!
Next post உத்தரப்பிரதேசத்தில் டீச்சரை கற்பழித்த மாணவன்: வீடியோ எடுத்து மிரட்டல்!!