அமெரிக்காவில் ஜோடியாக விடுமுறை கொண்டாட்டம்: திரிஷா–ராணா காதல் தீவிரம்!!

Read Time:2 Minute, 15 Second

faeafdb4-0a88-4a03-b574-2dd5891fbf76_S_secvpfதிரிஷா–ராணா காதல் தீவிரமாகியுள்ளது. இருவரும் ஜோடியாக அமெரிக்காவில் விடுமுறையை கொண்டாடச் செல்கின்றனர்.

இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. படவிழாக்களில் ஒன்றாக பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சிகளில் அருகருகே அமர்ந்தனர். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த படகு விழா ஒன்றில் ஜோடியாக நடனமும் ஆடினார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர். நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்றார்கள். ஆனாலும் படஉலகத்தினர் இதை நம்ப மறுத்தனர். இருவரும் காதலிப்பது உறுதி என்றனர்.

இதனை நிரூபிக்கும் வகையில் இருவரும் அமெரிக்காவில் ஜோடியாக விடுமுறையை கொண்டாடுகிறார்கள்.

வடஅமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்பு நடத்தும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க திரிஷா அழைக்கப்பட்டு உள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக திரிஷா ஏற்கனவே அங்கு சென்று விட்டார். இன்றும் நாளையும் செயின்ட் லூயிஸ் பகுதியில் இவ்விழா நடக்கிறது.

திரிஷா அமெரிக்கா போனதை தொடர்ந்து ராணாவும் அங்கு செல்கிறார். அமெரிக்கா எனக்கு பிடித்த இடம். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அங்கு செல்கிறேன் என்று டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

திரிஷாவும் ராணாவும் அமெரிக்காவில் சில நாட்கள் ஜாலியாக விடுமுறையை கழிக்க திட்டமிட்டுள்ளனர். காதலை மேலும் வலுவாக்கி விட்டு நாடு திரும்புகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) அதிசய வாழைக்குலை!!
Next post கணவரை விவாகரத்து செய்வதாக ரம்பா பற்றி வதந்திகள்: குஷ்பு கண்டனம்!!